அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து….

மதுரையில்  ரூ300கோடி மதிப்பீட்டில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் 4 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் இதயவியல் பிரிவு, வெளி நோயாளிகள் பொதுப் பிரிவு, உள்நோயாளிகள் சிறப்பு பிரிவு என பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல் தளத்தில் இதயவியல் துறை நுழைவாயில் முன்பு (பால் சீலிங்) கட்டிட மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக நோயாளிகள் நோயாளிகளின் உறவினர்கள் யாரும் இல்லாததால் அப்பகுதியில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பெயர்ந்து விழுந்த இடத்தின் அருகே உள்நோயாளியாக இதய நோயாளிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

—   ஷாகுல், படங்கள்  : ஆனந்தன்

Comments are closed, but trackbacks and pingbacks are open.