717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு வரவேற்பு !
ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் புதிய ஆட்சி தங்கள் தலைமையில் அமைந்த பிறகு சுமார் 717 டாஸ்மாக் கடைகள் (பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள்) மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.
717 கடைகளை மூடுவதால் ஏற்படக் கூடிய உபரி பணியாளர்களை மீதமுள்ள கடைகளில் பணியமர்த்திட வாய்ப்பிருக்காது எனவும், மீதமுள்ள கடைகளில் தேவையான அளவிற்கு பணியாளர்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
எனவே, இப்பணியாளர்களை கல்வித் தகுதிக்கேற்ப அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் (தமிழக அரசு அலுவலகங்கள், போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை) காலியாக உள்ள பணியிடங்களில் மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய பணியாளர்ககளை பணிக்கமர்த்தி வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழக முதல்வர் தகுந்த முடிவெடுத்து உத்தரவிட வேண்டுமென யு.டி.யு.சி.தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.