அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தரகு வேலையை பார்க்கிறார் வைகோ – மல்லை சத்யா பேட்டி

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட வெற்றி கழகம் சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க தீரர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

வைகோ திராவிட இயக்க கொள்கையிலிருந்து பிறழ்ந்து தடம் மாறி இருக்கிறார். மதிமுக திரிபுவாத இயக்கமாக மாறி மகன் திமுக வாக மாறி விட்டது.

தன் வாரிசு துரைக்காக எங்கள் மீது துரோக பழியை சுமத்தினார். இந்த மாதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எங்கள் கட்சி பதிவை ஏற்றுக்கொள்ளும் என எதிர்ப்பார்த்து உள்ளோம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

2026 தேர்தல் மிகப்பெரிய அதிர்ச்சியை அரசியலில் உருவாக்கி உள்ளது. பணம் கொடுக்காமல் வாக்களிப்பது சிறப்பு ஆனால் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் வாக்களித்தது மிகப்பெரிய தவறு.

சிறப்பான திட்டங்களை நிறைவேற்றிய ஸ்டாலின் போன்றோர் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தங்கத்திற்கு நிகராக இரும்பை வைத்து மக்கள் எடை போட்டுள்ளார்கள்.

த.வெ.க ஆட்சியில் நாள்தோறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடந்து கொண்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

மதுப்பான கடைகளை மூடுவோம் என்றவர்கள்  ரெஸ்ட்ரோ பார் திறக்க உள்ளதாக தகவல் வருகிறது. அதை அவர்கள் செய்ய கூடாது. அதற்கு வைகோ ஆதரவாக வரலாம் விஜய் ரசிகர் மன்ற தலைவராக வைகோவும் துரை வைகோ வும் செயல்படுகிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விஜய்க்கு டூப்பு போடும் விதத்தில் வைகோ நடித்தி வருகிறார்.

துரை வைகோவிடம் திமுக சார்பில் யாராவது ராஜினாமா செய்ய கூறினார்களா ? வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை என்பதை கூற முடியுமா ?

துரை வைகோ பரிசுத்தமானவர் அல்ல. அவரின் நடவடிக்கை வைகோவின் நடவடிக்கை விசாரிக்கப்பட வேண்டும்.

வைகோ நாடாளுமன்ற பேச்சு புத்தகமாக ஏற்கனவே சென்னையில் வெளியிடப்பட்டது. மீண்டும் புத்தகத்தை வெளியிட பா.ஜ.க – த.வெ.க இணைக்க இடைதரகு பணியை வைகோ செய்து வருகிறார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

லஞ்சம் ஊழல் குறைந்திருந்தால் காஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய தேவை இல்லை.

த.வெ.க அரசை விமர்சனம் செய்பவர்கள் கைது செய்யப்படுவது த.வெ.க அரசு ஜனநாயக பாதையிலிருந்து பாஸிச பாதைக்கு செல்கிறதோ என்கிற சந்தேகம்  வருகிறது.

திமுக வெற்றி பெற்றிருந்தால் திமுகவிலிருந்து வைகோ விலகி இருக்க மாட்டார்.

திருச்சியில் துரை வைகோ போட்டியிட ராகுல் காந்தியை தனியாக சந்தித்து ஸ்டாலின் பேசி சீட்டு வாங்கி கொடுத்தார். இன்று அவருக்கே துரோகம் செய்துள்ளார்கள்.

சுதந்திரா கட்சி, ம.பொ.சி கட்சி,  நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் காணாமல் கரைந்து போனது போல மதிமுக வும் காணமல் போகும் என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.