வழக்கறிஞரிடம் ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கறிஞரான இவரிடம் திருச்சி நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்த ஒரு பிரகாஷ் (வயது 37) என்ற வாலிபர் அறிமுகம் ஆகிறார். அவர் தான் பழ வியாபாரம் செய்து வருவதாகவும், இந்த வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி அவரை நம்ப வைத்தார்.

இதையடுத்து கடந்த 31.08.25 அன்று சுபாஷ் சந்திரபோஸ் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை அந்த பிரகாஷ்யிடம்  கொடுத்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் ஒரு வாரத்திற்குள் ஆயிரம் ரூபாய் லாபத்துடன் அந்த தொகையை திருப்பி செலுத்தினார். அதன் பிறகு சுபாஷ் சந்திரபோஸ் பிரகாசின் செயலை நம்பி தன்னிடம் இருந்த ரூபாய் 16.5 லட்சம் பணத்தை ரொக்கமாகவும் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும் கொடுத்தார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பின்னர் பிரகாஷ் நீண்ட காலமாகியும் லாபத் தொகையை தரவில்லை. இது தொடர்பாக சுபாஷ் சந்திரபோஸ் பலமுறை பணத்தை கேட்ட பொழுதும், தராமல் இழுத்து அடித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபாஷ் சந்திர போஸ் நெருக்கடி கொடுக்கவே பிரகாஷ் காசோலை கொடுத்துள்ளார். அந்த காசோலையை சுபாஷ் சந்திரபோஸ் வங்கியில் கொடுத்து பணம் பெற முயற்சி செய்தபோது பணம் இல்லை என்று வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சடைந்த சுபாஷ் சந்திரபோஸ்தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் வழக்கறிஞர் சுபாஷ் சந்திர போஸ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  ரூபாய் 16.5 லட்சம் பணத்தை மோசடி செய்த  பிரகாஷ்சை கைது செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.