அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

செயற்கை நுண்ணறிவு : உலகை திரும்பிப் பார்க்க வைத்த திருச்சி இளைஞர் !

திருச்சியில் அடகு நகையை விற்க

இது தொழில்நுட்ப புரட்சிகளின் காலம். உலகமே உள்ளங்கையில் அடங்கியிருக்கும் காலமும்கூட. சாட்ஜி.பி.டி, ஜெமினி என இதுகாறும் கற்பணைக்கே எட்டாத, அதிசயத்தக்க மாயாஜாலங்களின் காலம்.

உலக அளவில் மென்பொருள் துறையில் இந்திய பொறியாளர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அவுட்சோர்சிங் அடிப்படையிலான மென்பொருள் துறை சார்ந்த பணிகளிலும் இந்திய பொறியாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

இத்தகைய பின்புலத்தில்தான், இந்தியராக … தமிழராக … அதிலும் குறிப்பாக திருச்சியை பூர்வீகமாக கொண்ட இளம் மென்பொருள் பொறியாளர் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு தனித்துவமான சாதனையை புரிந்திருக்கிறார்.

அந்த சாதனை இளைஞனின் பெயர் சோமசுந்தரபிரபு சூர்யநாராயணன். அண்ணா பல்கலை கழகத்தில் மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் பொறியாளர் பட்டம் பெற்றவர். 2012 இல் சென்னையில் காக்னிசண்ட் நிறுவனத்தில் தரப்பொறியாளராக பயணத்தை தொடங்கியவர். 2014 இல் மின் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெறும் பொருட்டு அமெரிக்கா செல்கிறார். உலக அளவில் பிரபலமான மைவெஸ்ட், பேபால், மற்றும் லைஃப்360 ஆகிய நிறுவனங்களில் தரப்பொறியியல் பதவிகளை வகித்தவர், நிறைவாக குக்யூனிட்டியில் பணியாளர் தர உறுதி ஆட்டோமேஷன் பொறியாளராக பணியில் அமர்கிறார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதுதவிர மென்பொருள் தர சமூகத்தில் அவர் குறிப்பிடத்தகுந்த நபராக திகழ்பவர். அவர் ஒரு IEEE உறுப்பினர். ஸ்பிரிங்கருடன் தொடர்புடைய இரண்டு சர்வதேச மாநாடுகளான ICDAM2026 மற்றும் IJCACI2026-க்காக இருபது சக மதிப்பாய்வுகளை அவர் முடித்திருக்கிறார். அவர் இன்னோவேட் QA 2026 விருதுகளுக்கு நடுவராகப் பணியாற்றியிருக்கிறார். ஏப்ரல் 28 அன்று, 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 165,000-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட மென்பொருள் சோதனை சமூகமான ‘தி டெஸ்ட் டிரைப்’-இல் அவர் உரையாற்றியிருக்கிறார். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் IEEE I3CTCON 2026 மற்றும் IJCACI 2026 மாநாடுகளுக்கு அவர் அமர்வுத் தலைவராகவும் பணியாற்றவிருக்கிறார்.

இத்துனை திறமைகளுக்கும் சொந்தக்காரரான சோமசுந்தரபிரபு சூர்யநாராயணன் கவனத்தை பெற்றது குக்யூனிட்டியில் (CookUnity) அவர் செய்த ஒரு சோதனை முயற்சிதான். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மென் பொறியாளர்கள் எல்லோரும் தங்களது பணியிடங்களை காவு வாங்க வந்த எமனாகவே பாவித்து வரும் பின்னணியில்தான், அதே ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கொண்டு மனித தவறுகளற்ற மென்பொருள் நிர்வாகத்தை அவர் கட்டமைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தர உள்கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார். இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார். செல்லும் இடமெங்கும் சோமசுந்தரபிரபு சூர்யநாராயணன் தனது ஆய்வு முடிவுகளை விளக்கி உரையாற்றி வருகிறார்.

இரண்டு தசாப்தங்களாக இந்தியச் சேவைத் துறையின் வாடிக்கையாளர்களாக இருந்து வரும் அமெரிக்க நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்கள், இப்போது ”செயற்கை நுண்ணறிவுத் தர அமைப்புகளைத் தங்களுக்குள்ளேயே உருவாக்குகின்றன. பல இந்தியர்களின் தொழில் வாழ்க்கையின் பொருளாதார அடித்தளமாக இருந்து வரும் இந்த வகையான பணி மறைந்துவிடப் போவதில்லை. அது வடிவம் மாறுகிறது. அது எங்கே, எப்படிச் செய்யப்படுகிறது என்பது இப்போது மறுபரிசீலனை செய்யப்படுகிறது. எனது கணிப்பின்படி, அந்தப் பணியைச் செய்யக் கற்றுக்கொள்ளும் பொறியாளர்கள், அடுத்த பத்தாண்டுகளுக்கான மென்பொருள் விநியோகத்தில் ஒரு வலுவான நிலையில் இருப்பார்கள். இந்த மாற்றம் தலைகீழாக மாறும் என்று காத்திருப்பவர்கள், அது அவ்வாறு மாறாது என்பதைக் காண்பார்கள்.” என ஆணித்தரமாக, சொல்கிறார் சோமசுந்தரபிரபு சூர்யநாராயணன்.

–         அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.