குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்! போலீசுடன் தள்ளுமுள்ளு !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீக் தாயள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

அப்போது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சித்த விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் செத்து மடிவதாக கூறி ஒரு சாக்கு முட்டையில் மனித மண்டை ஓடுகளை எடுத்து வந்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்போது நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மண்டை ஓட்டுடன் கூட்ட அரங்குக்குள் செல்ல தடை விதித்தனர் இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மண்டை ஓட்டை வெளியே கொண்டு சென்றனர். பின்னர் திடீரென மண்டை ஓட்டுடன் கூட்ட அரங்குக்குள் ஓடிச்சென்று நுழைய முயன்றனர்.

அப்போது கூட்டரங்க நுழைவாயில் கதவை போலீசார் மூடி மண்டை ஓடு எடுத்துச் சென்றவரை துரத்திப் பிடித்தனர். அதைத்தொடர்ந்து அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகளுக்கு காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சத்தத்தை கேட்டு கலெக்டர் அலுவலக முதல் மாடியில் பணியாற்றி வந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் கலெக்டர் மண்டை ஓட்டுடன் உள்ளே வர அனுமதி மறுத்ததை தொடர்ந்து மண்டை ஓட்டை விவசாயிகள் எடுத்துச் சென்றனர் அதன் பின்னர் அய்யாகண்ணு  உள்ளிட்ட விவசாயிகள்  வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர் இந்த போராட்டத்தின் காரணமாக இன்று கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.