எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை சிதைத்த எடப்பாடி ! – கு.ப. கிருஷ்ணன்
முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சிக்கு வந்து மக்களை சந்திப்பார். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிதைத்து விட்டார் என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்
தமிழக வெற்றிக்கழக டெல்டா மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் கிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-
தமிழக வெற்றி கழகத்தில் இன்றைக்கு பல்வேறு இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர். எனது தலைமையிலும் பலரும் இணைந்துள்ளனர். புதிதாக இணைபவர்களிடம் நான் எந்த பதவியும் வாங்கி தருவேன் என உத்தரவாதம் அளிக்கவில்லை அவர்களும் அதை விரும்பவில்லை. தொடர்ச்சியாக இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்று தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்ற வந்திருக்கிறார்கள் அவர்களை நான் வரவேற்கின்றேன்.
எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த அண்ணா திமுக வின் வளர்ச்சிக்கும் நாங்கள் பாடுபட்டுள்ளோம். இப்போது அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிதைத்து விட்டார்.
விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.அந்த வகையில் திருச்சிக்கும் அவர் விரைவில் வருகை தர உள்ளார் திருச்சிக்கு வரும்போது மக்களை நிச்சயம் சந்திப்பார்.
முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கருமண்டபம் பத்மநாதன், என்.எஸ். பூபதி, உஸ்மான் பாபு ஆகியோர் முன்னிலையில்.
அதிமுக மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முல்லை சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் பா.நிரஞ்சன், பொன் சிவ சூர்யா ,தி. அருண்குமார், அ. அப்சர் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அருள்ஜோதி, ஏர்போர்ட் விஜி, உய்யக்கொண்டான் திருமலை பால்ராஜ்,வரகனேரி அரசு,
எட்டரை வீரையன், தென்னூர் ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.