அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தந்தைக்கு பணம் – போலீசார் சூழ்ச்சி – சிறுமி உடல் தகனம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தாய்க்கு தெரியாமல் தந்தைக்கு பணம் தந்து சிறுமி உடல் தகனம்: சித்தி திடீர் புகார். சிறுமியின் சித்தி அளித்த பேட்டியில், சிறுமி கொலையில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். இன்று பேசிய முதலமைச்சர் முன்பே பேசியிருந்தால் நாங்கள் உடலை வாங்க தயாராக இருந்தோம். ஆனால் ஆறுதல் கூட தெரிவிக்காததால் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து வந்தோம். ஆனால் போலீசார் சூழ்ச்சி செய்து தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு உடலை ஒப்படைத்துள்ளனர்.
மேலும் சிறுமியின் உடலை மருத்துவமனையின் பின் வாசல் வழியாக எங்களுக்கு தெரியாமல் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் தந்தைக்கு கட்சியினர் மற்றும் பல்வேறு நபர்கள் பணம் கொடுத்து ஆசை வார்த்தை கூறி பெற்ற தாய்க்கு கூட தெரியாமல் உடலை அனுப்பி வைத்துள்ளனர். தகவல் அறிந்து நாங்கள் பஸ் மூலம் சேலம் மாவட் டம் மேட்டூர் சென்ற போது குழந்தையின் சடலம் தகனம் செய்யப்பட்டு அனைத்து சடங்குகளும் முடிந்து இருந்தது. சிறுமி கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் நாங் கள் நீதிமன்றத்தை நாட குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம். சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடலை தோண்டி கூட எடுக்கக் கூடாது என்று திட்டமிட்டு உடலை தகனம் செய்துள்ளனர். என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.