அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நகர்புற சமுதாய கழிப்பறை பராமரிப்பு – திருச்சி SEVAI-யின் தனி முத்திரை !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அவசரத்துக்கு ஒதுங்க இடம் கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறீர்களா? கிராமப்புறங்களில்கூட, மரம் செடி கொடிகளின் மறைவில் ஏதோ சமாளித்துவிடலாம். ஆனால், எப்போதும் பரபரப்பாகவே இயங்கிவரும் நகர்ப்புறங்களில்? எப்போதாவது பயண நிமித்தமாக வந்து செல்வோருக்கே இந்த நிலைமை எனில், தினக்கூலி தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், குடிசைப் பகுதி மக்கள் மற்றும் சொந்த கழிப்பறை வசதி இல்லாத நகர்புற ஏழைகளின் பாடு எத்தகையது?
சுத்தமான, பாதுகாப்பான மற்றும் செயல்படும் கழிப்பறை வசதி என்பது நகர்புற பொது சுகாதாரத்தின் அடிப்படை மட்டுமல்ல; மனித கண்ணியத்தின் அடையாளமும்கூட. இந்த நடைமுறைச் சிக்கலை கருத்தில் கொண்டுதான், இதற்கு ஒரு தீர்வாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன், SEVAI தொண்டு நிறுவனம் தற்போது திருச்சி நகரம் முழுவதும் உள்ள 12 நகர்புற சுகாதார வளாகங்களை பராமரித்து வருகிறது.
வெறுமனே சுகாதார வளாகங்களை பராமரிப்பது என்ற கடமையோடு SEVAI வரம்பிட்டுக் கொள்வதில்லை. அதையும் தாண்டி, சுகாதாரப் பழக்கங்களை வளர்தல், நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் சமூக உரிமையுணர்வை உருவாக்குதல் என்பதாக அதனை சேவை விரிகிறது.
இந்த 12 வளாகங்களும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் அதிக மக்கள் கூடும் பல்வேறு வார்டுகளில் அமைந்துள்ளன. பயிற்சி பெற்ற உள்ளூர் பராமரிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தினசரி நிர்வாகம், தூய்மை பேணுதல் மற்றும் பயனாளர்களுக்கு உதவுதல் ஆகிய பொறுப்புகளை ஏற்று செயல்படுகின்றனர்.
பராமரிப்பாளர்களின் பணி தினசரி சுத்தத்தில் இருந்து தொடங்குகிறது. ஒரு நாளைக்கு பல முறை, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட பட்டியலின் படி சுத்தம் செய்யப்படுகிறது. பொருத்தமான கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்டு, கைப்பிடிகள், குழாய்கள், இருக்கைகள் போன்ற அதிகம் தொடப்படும் இடங்கள் அடிக்கடி சுத்தப்படுத்தப்படுகின்றன. கழிவு குப்பைத் தொட்டிகள் தொடர்ந்து காலி செய்யப்பட்டு, நிரம்புவதையும் துர்நாற்றம் வீசுவதையும் தடுக்கப்படுகிறது.
தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதும் பராமரிப்பாளர்களின் முக்கிய பொறுப்பாகும். குழாய்கள், தண்ணீர் பாய்ச்சும் அமைப்புகள் மற்றும் மேல்நிலை தொட்டிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. ஏதேனும் கசிவுகள் அல்லது பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாக மாநகராட்சி தொழில்நுட்ப குழுவிற்கு தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் விளக்குகளுக்கான மின்சாரமும் நிர்வகிக்கப்பட்டு, பயனாளர்களிடம் மென்மையான நினைவூட்டல் மூலம் நீர் சிக்கனம் ஊக்குவிக்கப்படுகிறது.
சிறு பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுவதுடன், பெரிய பழுதுகளை SEVAI-யின் தொழில்நுட்ப குழுவிற்கும் மாநகராட்சிக்கும் தெரிவிக்கின்றனர். கழிவு மேலாண்மையிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. சானிடரி நாப்கின் கழிவு கொட்டும் பெட்டிகள் தொடர்ந்து காலி செய்யப்பட்டு மாற்றப்படுகின்றன. கழிவுகள் உயிரியல் மருத்துவ விதிமுறைகளின்படி பாதுகாப்பாக கையாளப்படுகின்றன. அதேபோல் வளாகத்திற்குள் திடக்கழிவுகளை பிரித்து போடுவதையும் பராமரிப்பாளர்கள் ஊக்குவித்து, சுகாதாரப் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து கழிவுகளை உரிய நேரத்தில் அகற்ற ஏற்பாடு செய்கின்றனர்.
புகார் மற்றும் ஆலோசனைக்கான தொடர்பு எண்கள் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி அவர்களின் வழியே கவனத்திற்கு வரும் குறைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார்கள்.
திருச்சியில் SEVAI-யின் பராமரிப்பாளர் அடிப்படையிலான அணுகுமுறை, பராமரிப்பை ஒரு முறை கட்டுமானமாக அல்லாமல் தொடர்சியான, மக்களை மையமாகக் கொண்ட சேவையாக கருதும்போது சுகாதாரம் நீடித்து நிலைக்கும் என்பதை நிரூபிக்கிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் தொடர்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன், இந்த மாதிரி மேலும் பல வார்டுகளில் நகர்புற சுகாதாரம், கண்ணியம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்த பெருக்க முடியும்.

HARINI JEWELLERS TRICHY

—  கிருஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.