அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் : ஏலத்திலிருந்து விலகினால் அபராதம் – இ.எம்.டி. சலுகை ரத்து !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்பதாக அறிவித்ததுபோல, ஜூன்-12 வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்ட ஏலத்தில் பங்கேற்று இதுவரையில் ரூ403,68,04,901.00 மதிப்புள்ள இடங்களை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.
இதுவரை நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்ற 2341 பேரில், 1599 பேர் இன்னும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய சேவைக்கட்டணம் ரூ.7000+ஜி.எஸ்.டி. கட்டவில்லை என்ற தகவலை எம்.எஸ்.டி.சி. தரப்பில் முன்வைக்க அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி பத்து நாள் அவகாசம் வழங்கி அதற்குள்ளாக பணம் செலுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பல்வேறு காரணங்களால் ஏலத்தில் எடுத்த இடத்தை உறுதி செய்யாமல், ஏலத்திலிருந்து விலக நேரிட்டால் ஏற்கெனவே 25,000 அபராதம் விதிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது இதுபோல முதல்முறை ஏலத்தை ரத்து செய்தவர்கள் அவர்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளராக இருந்தாலும் அவர்கள் இரண்டாவது முறையாக ஏலத்தில் பங்கேற்றால் கண்டிப்பாக இ.எம்.டி. கட்டணம் செலுத்திதான் பங்கேற்க முடியும் என்பதாக கறார் காட்டிருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
கடந்த விசாரணையில் சுட்டிக்காட்டியிருந்தபடி, யு.பி.ஐ. பண பரிமாற்ற வசதி மற்றும் குழு ஏல நடைமுறைக்கான தனி பொத்தான் வசதியை எம்.எஸ்.டி.சி. தரப்பில் தற்போது அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.
அடுத்தகட்டமாக, தரிசு நிலங்களை பொது ஏலத்திற்கு கொண்டுவருவது குறித்த விசாரணையில், மதுரை உயர்நீதிமன்றத்திற்கு பின்புறமுள்ள சுமார் 38 ஏக்கர் தரிசு நிலத்தை அப்படியே ஏலத்துக்கு விடாமல் எங்களிடம் ஒப்படைத்தால் அவற்றை பிளாட்டுகளாக மாற்றி ஏலத்துக்கு கொண்டுவந்தால் வெளி நபர்கள் நல்ல விலைக்கு ஏலம் எடுப்பார்கள். அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்பதாக நியோமேக்ஸ் நிறுவனத்தரப்பிலும், எம்.ஸ்டார் ரெரா அசோசியேசன் தரப்பிலும் முன்வைக்கப்பட்டது. இது நிறுவனத்தின் இழுத்தடிக்கும் வேலை என்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
பட்டியல் – சி. இல் இடம்பெற்றுள்ள திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, சனமங்கலம் கிராமம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இடங்களில் உள்ள தரிசு நிலங்கள் ஏலம் விடுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக நிறுவனத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீதிபதி பரதசக்ரவர்த்தி

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

நீதிபதி பரதசக்ரவர்த்தி

2026 June 11 - 17 Angusam Book

பலமுறை சுட்டிக்காட்டியும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, நியோமேக்ஸ் சொத்துக்களை இ.ஓ.டபிள்.யூ. போலீசார் அட்டாட்ச்மென்ட் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுபோல முதலீட்டாளர்கள் தெரிவிக்கும் இடங்களை பரிசீலித்து அவற்றை அட்டாச்மென்ட் செய்வது, மதிப்பீடு செய்து ஏலத்துக்கு கொண்டுவரும் நடைமுறையை மட்டும் செய்வதற்கென்று தனி அலுவலரை நியமிப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞரை நீதியரசர் பரதசக்ரவர்த்தி கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு எஸ்.பி. டாக்டர் சரவணக்குமார் தொடர்ந்து வரும் நிலையில், டான்பிட் சட்ட விதிகளின்படி தனி டி.ஆர்.ஓ. அதிகாரியை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் அரசிடம் கேட்டு பதிலளிக்குமாறு அறுவுறுத்தியிருக்கிறார்.
ஏலம் தொடர்பாக, யூடியூப் சேனலகளில் தவறாக பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி உத்தரவிட்டிருக்கிறார்.
அரசு தரப்பில் புதிய சாஃப்ட்வேர் உருவாக்குவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது. குறைந்தபட்சம், தீர்வு திட்டத்திற்கு பயன்படும் வகையிலாவது அதற்குள்ளாக முடிக்க அறிவுறுத்தியிருக்கிறார்.
ஒரே தொலைபேசி எண்ணில் 700-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருப்பது; 2008 இல் விநியோகிக்கப்பட்ட பாண்டுகளைகூட ஆவணமாக இணைத்திருப்பது எல்லாம் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. புகார்களின் நம்பகத்தன்மையை இந்த விவகாரம் கேள்வி எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது. இது குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் இன்னும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை 365 நாளும் 24 மணிநேரமும் விசாரித்தால்கூட நேரம் போதாது. தொடர்ந்து உரிய முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கிறேன். என்பதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.
ஏலத்தில் யாரெல்லாம் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் இ.எம்.டி. சலுகை? உறுதி செய்யப்படாத புகார் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களும் ஏலத்தில் பங்கேற்கலாமா? அபராதம் யாருக்கு? பாண்டுக்கு லேண்ட் என்ற அடிப்படையில் இடத்தை மொத்த பாண்டுகளின் அளவுக்கு ஏலம் எடுக்கலாமா? ஒருவேளை பாண்டின் மதிப்பில் 100% அளவுக்கு ஏலத்தில் நிலத்தை எடுத்துவிட்டு, பிறகு தீர்வுத்திட்டத்தின்போது 50-70% தான் முதற்கட்ட நிவாரணம் வழங்க முடியும் என்பதாக நீதிமன்றம் கைவிரித்துவிட்டால், வித்தியாசத்தொகையை கட்ட சொன்னால் என்ன செய்வது என்பது குறித்தெல்லாம் இன்னும் தெளிவு பெற முடியாத இக்கட்டில்தான் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான தெளிவை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்தான் வழங்க வேண்டும். தெளிவான பத்திரிகை செய்தியாக வெளியாக வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.