அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லால்குடி ரவுண்டானா !.

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழகம் முழுவதும் மே மாதம் விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் ஜுன் மாதம் திறந்ததால் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் சிக்கி தவிக்கிறது திருச்சி லால்குடி ரவுண்டானா பகுதி.
இந்த ரவுண்டானாவை சுற்றி தினந்தோறும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த பகுதியே நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி பள்ளி பேருந்துகள் உள்பட 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் லால்குடி வழியாக வந்து செல்கின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வந்து போகும் வாகனங்களில் அணிவகுப்பு ஒரு புறம் இருக்க பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்கள் லோடு வேன்கள் என்று அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகக் கேள்விக்குறியாக உள்ளது. லால்குடி வழியாக அரியலுர் ஜெயங்கொண்டம் மற்றும் கிராமபுறத்திற்க்கும் செல்லும் பேருந்துகள் என்று நெரிசல் ஏற்பட்டு இந்த ரவுண்டானா பகுதி சிக்கி தவிக்கிறது.
இதே போல் இந்த போக்குவரத்தை சமாளிக்க போதுமான அளவு போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பிற்காக இல்லை. எனவே, பள்ளி கல்லூரி பேருந்துகளை ரவுண்டானா முன்பு அல்லது வேறு இடத்தில் நிறுத்தி பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி செல்ல அறிவுறுத்த வேண்டும்.

லால்குடி ரவுண்டானா
லால்குடி ரவுண்டானா

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

மேலும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் பயணிகள் ஏறும் இடத்தில் வைக்கபடும் பேனர்களையும் விளம்பரப் பலகைகளையும் கடை முன்னே நிறுத்தக்கூடிய இருசக்கர வாகனங்களை நிறுத்த விடாமலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் அன்பில் செல்லும் பாதையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் சிறிய ரக வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் ரயில் வரும் பொழுது ரயில்வே கேட் மூடி திறப்பதால், அந்த இடத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இந்த பால வேலையை விரைவில் முடித்து தருமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. காரணம் சில்வண்டுகள் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு அதி வேகத்துடன் இருசக்கர வாகனத்தில் பறப்பதும் போதையில் திரியும் இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக ஓட்டி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லால்குடி ரவுண்டானாவில் இருந்து இயங்கக்கூடிய பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அதை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு முறையான உரிமம் உள்ளதா எனவும் வண்டிக்கு இன்சூரன்ஸ் உள்ளதால் எனவும் எஃப் சி உள்ளதா எனவும் அதிரடியாக சோதனை நடத்திட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

—   சதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.