தொடர் கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது !
அரியலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்த எதிரிகள் 1.அருண்பாண்டியன் (வயது 36) த/பெ ஆறுமுகம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் 2.கார்த்திகேயன் என்கிற மான் கார்த்திக் (வயது 24) த/பெ ஆசைத்தம்பி சமத்துவபுரம் அரியலூர் மாவட்டம், மற்றும் 3.தினேஷ்குமார் (வயது 26) த/பெ மூர்த்தி சாத்தமங்கலம் அரியலூர் மாவட்டம் ஆகிய மூவரையும் அரியலூர் நகர காவல் துறையினர் 18.05.2026 அன்று கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேற்குறிப்பிட்ட எதிரிகள் மூவர் மீதும் அரியலூர், கயர்லாபாத், கீழப்பழுவூர் மற்றும் செந்துறை ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக மொத்தம் 13 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் எதிரிகள் 1.அருண்பாண்டியன், 2.கார்த்திகேயன் மற்றும் 3.தினேஷ்குமார் மூவரும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டதாலும், இவர்கள் வெளியே இருந்தால் மேலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், எதிரிகள் மூவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க அரியலூர் காவல் ஆய்வாளர் அவர்கள், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் எதிரிகள் மூவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 20.06.2026 இன்று ஆணை பிறப்பித்தார்கள். இதனையடுத்து அதற்கான ஆணை பிரதி அரியலூர் மாவட்ட காவல்துறையினரால் இன்று திருச்சி மத்திய சிறைக்காவல் அதிகாரிகளிடம் சார்பு செய்யப்பட்டது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.