ஒரே மாதத்தில் 1.48 லட்சம் வழக்குகள்; ரூ.2.07 கோடி அபராதம் வசூல்!
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் விபத்துகள், திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் வாகன சோதனை நடத்தப்பட்டு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக திருச்சி 28738, புதுக்கோட்டை 20697, கரூர் 18262, பெரம்பலூர் 14813, அரியலூர் 23486, தஞ்சாவூர் 22305, திருவாரூர் 15712, நாகப்பட்டிணம் 4612 மற்றும் மயிலாடுதுறை 281 என மொத்தம் 148906 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியது தொடர்பாக திருச்சி 1318, புதுக்கோட்டை 336, கரூர் 1606, பெரம்பலூர் 340, அரியலூர் 872, தஞ்சாவூர் 1339, திருவாரூர் 533, நாகப்பட்டிணம் 522 மற்றும் மயிலாடுதுறை 18 என மொத்தம் 6884 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக திருச்சி ரூ. 90,11,100/-, புதுக்கோட்டை ரூ. 10,92,033/-, கரூர் ரூ. 26,54,000/-, பெரம்பலூர் ரூ. 10,000/-, அரியலூர் ரூ. 31,46,000/-, தஞ்சாவூர் ரூ. 34,65,300/-, திருவாரூர் ரூ.12,12,000/-நாகப்பட்டிணம் ரூ.91,000/- மற்றும் மயிலாடுதுறை ரூ. 33,000/- என வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் ரூ.2,07,14,433/- வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் விபத்துகள், திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தொடர் வாகன சோதனைகள் நடத்தி வாகன விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குகள் பதிய மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.




Comments are closed, but trackbacks and pingbacks are open.