அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவிக்கிடக்கிறது என்று சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார் விஜய்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்தை சட்டப்பேரவையில் பதிவு செய்தார் ?

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சபாநாயகர் எப்படி இதையெல்லாம் அனுமதித்தார் என்றே தெரியவில்லை ?

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வுத்துறை அமைச்சகம் “Magnitude of Substance Use in India” என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

அதன்படி, தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம், ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம், மயக்க மருந்துகள் 0.3 சதவீதம், உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடும் புழக்கமும் இல்லை என்று கூறவில்லை, இருக்கிறது. ஆனால்,போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலமாகவே தமிழகம் எப்போதும் இருக்கிறது.
குறிப்பாக தொழில் முறையாக கஞ்சா பயிரிடுவது, காவல்துறையின்  நடவடிக்கையால் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

மேலே கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும்National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (AIIMS) இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் தாறுமாறாக போதைப்பொருள் பரவியுள்ளது என முதலமைச்சர்  சட்டமன்றத்தில் கூறியது எந்த தரவுகளின் அடிப்படையில் ?

எந்த ஆதாரங்களும்/தரவுகளும் இல்லாமல் முதலமைச்சரே மாநிலத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்.

இந்த குற்றசாட்டை எதிர்க்கட்சிகள் வைத்தாலும், தமிழ்நாடு அரசு மறுக்க வேண்டும்.

ஆனால், விஜய் இந்த விஷயங்களை பேசும் போது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் ரசிக்கின்றனர்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது.

சில கேள்விகள் ?
1) எத்தனை பேரிடம் ஆய்வுகள் மேற்கொண்டு தாறுமாறாக போதைப்பொருள் நடமாட்டம் பரவிக்கிடப்பதை முதலமைச்சர் அலுவலகம் கண்டுபிடித்தது ?

2) ஆய்வை நடத்தி ஆதாரங்களை முதலமைச்சர் அலுவலகத்திற்கு வழங்கியது காவல்துறையா ? சுகாதாரத்துறையா ?

3) வயது வாரியாக ஆய்வு மேற்கொண்டு, தாறுமாறாக போதைப்பொருள் பரவியிருப்பது கண்டறியப்பட்டதா ?

4) எந்தெந்த மாவட்டத்தில் போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?

5) எத்தனை மாவட்டங்களில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ளது ?

6) என்ன வகையான போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?

7) மதுபானம் தவிர்த்து தமிழ்நாட்டில் அதிகமாக பரவியுள்ள போதைப்பொருள் எது ?

8) கஞ்சாவா, மாத்திரைகளா, சிந்தெட்டிக் வகைகளா, ஓபியம் மூலம் தயாரிக்கப்படும் போதைப்பொருளா,மூக்கு வழியாக உள்ளிழுக்கும் பவுடர் மருந்துகளா எது அதிகம் பரவியுள்ளது ?

இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா உங்களிடம் Chief Minister of Tamil Nadu ?

அப்படியே வாய்க்கு வந்ததை சட்டப்பேரவையில் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் பொதுவாக கூறிச்செல்வது கொஞ்சமும் சரியல்ல.

வரும்காலத்தில் இப்படியான உளறல்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அரவிந்த் சக்ஷனா – பத்திரிகையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.