இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் !
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து 24.06.2026 நேற்று மாலை 5.15 மணி அளவில் மாநகர் மாவட்ட செயலாளர் தோழியர் A.அஞ்சுகம் தலைமையில் சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தோழியர் மு. கண்ணகி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தோழியர் S.பார்வதி மாவட்ட துணைசெயலாளர் தோழியர் S.முத்துலெட்சுமி பெண்கள் சங்க துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M.மருதாம்பாள் மாவட்ட துணை தலைவர் தோழியர் K.ஆயிஷா மாவட்டக்குழு உறுப்பினர் தோழியர் G.ஈஸ்வரி மாவட்டப் பொருளாளர் தோழியர் M.சுமதி ஒன்றிய தலைவர் தோழியர் D.நிர்மலா உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தில் தோழியர் A. இன்னசென்ட் விமலா மேரி, தோழியர் S.லெட்சுமிபிரபா, தோழியர் K. தனலெட்சுமி, தோழியர் B.பல்கீஸ்பானு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு இறுதியாக ஒன்றிய பொருளாளர் தோழியர் M. ரஜியாபேகம் நன்றி கூறினார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.