தயாரிப்பு: ‘ஏபிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட்’ அப்துல் பாசித் சையத், இணைத் தயாரிப்பு: மொகமதுஃபெரோஸ். டைரக்டர் & ஹீரோ: அஷ்ரப், ஜனனி சாமிநாதன், கருணாகரன், ஆடுகளம் நரேன், தேவி மகேஷ், ‘உறியடி’ சிவா. ஒளிப்பதிவு: ரயீஸ் அகமது, இசை: ராஜ்குமார் சந்திரசேகர், வசனம் & பாடல்கள்: பிரேமன், எடிட்டிங்: ஆர்.சி.பிரணவ், பிஆர்ஓ: ஸ்ரீவெங்கடேஷ்
கொடைக்கானல் பகுதியில் இருக்கும் மதி கெட்டான் சோலை என்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் போகும் முயற்சியில் இறங்குகிறார் சென்னையில் ஃபோட்டோகிராபராக இருக்கும் ஹீரோ அஷ்ரப். இவருக்கு உதவி செய்கிறார் சிவா. போவதற்கு முன் கொடைக்கானல் ஏரியாவில் அந்த மதி கெட்டான் சோலை யைப் பற்றி பீதி கிளப்புகிறார்கள் மக்கள்.
ஆனாலும் அங்கே செல்கிறார் அஷ்ரப். அதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோ கதி என்ன? இதான் இந்த ‘ஃபோட்டோகிராபர்’. போனா திரும்ப முடியாதுங்கிற ஆபத்தான காட்டுப் பகுதியில் ஹீரோ மட்டும் போனா என்ன நடக்கும்? கூட்டம் கூட்டமாக பேய்கள் வந்து அலறவிடும். நாக்கு வெளியே தள்ளும். படுபயங்கரமா காற்றடிக்கும், குபீர் குபீர்னு ஆவிகள் கூட்டம் வரும். அடித்தொண்டையிலிருந்து மர்மக் குரல் வந்து குலை நடுங்க வைக்கும். இப்படியெல்லாம் நாமளும் நீங்களும் நினைக்கிறதும் இருக்கு. நினைக்காததும் இருக்கு. சென்னையில் தனது அப்பா ஆடுகளம் நரேனிடம், லவ்வர் ஜனனி சாமிநாதனிடம், ஃப்ரெண்ட் கருணாகரன் விடம் பேசும் போது கூட பிரமை பிடித்தது போல இருக்கிறார் அஷ்ரப். திடீரென ஆக்டிவிட்டீஸ் சேஞ்ச் ஆகுது. மதி கெட்டான் சோலைக்குள் போறதுக்கு முன்னாடியே இப்படி புத்தி கெட்டுப் போயிருக்காரேன்னு நாம நினைப்பதற்குள் இடைவேளை விட்டுட்டாய்ங்க. அதுக்கப்புறம் தான் கதையே ஆரம்பிக்குது.
கோல்டன் ட்ரீ ( தங்கமரம்) ஃபோட்டோ ஒன்றும் சிறுவயதில் தனது அம்மா (தேவி மகேஷ்) சொன்ன மரங்கள் கதையும் தான் ஹீரோவுக்குள் ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவிதையான ஃப்ளாஷ் பேக் மூலம் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் டைரக்டர் & ஹீரோ அஷ்ரப். படத்தில் மொத்தம் ஐந்து கேரக்டர்கள் இருந்தாலும் அஷ்ரப் மட்டுமே படத்தை நகர்த்திச் செல்கிறார். இவரது அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ் முகத்தில் அன்பும் கருணையும் அளவில்லா ஆனந்தமும் அப்படியொரு பொழிவு.
” நீ மத்தவங்களுக்கு பிடித்த மாதிரி வாழாதே…. உனக்கு பிடித்த மாதிரி வாழு” என சிறுவன் அஷ்ரப்பிட்ம் சொல்லும் சீன் அழகோ அழகு. அதே அழகு முகம் க்ளைமாக்ஸில் கோரமாக மாறும் பெருந்துயரம், அதற்கான மருத்துவக் காரணம் என்று கவனம் ஈர்க்கிறார் அஷ்ரப். டைட்டிலுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள் கேமரா மேன் ரயீஸ் அகமது ம் மியூசிக் டைரக்டர் ராஜ்குமார் சந்திரசேகரும். அஷ்ரப்பின் மனசுக்குள் ஓடும் காட்சிகள் நமக்கு குழப்பம் ஏற்படுத்தினாலும் டாக்டர் நிழல்கள் ரவி அதற்கான காரணம் சொல்வது ஏற்றுக் கொள்ள வைத்தது. சற்று மாறுபட்ட சினிமா ரசனையாளர்களுக்கு இந்த ‘ஃபோட்டோகிராபர்’- ஐ பிடிக்கும்.
அங்குசம் பார்வையில் ‘ஃபோட்டோகிராபர்’ 40/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.