அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறையின் புத்தாக்கப் பயிற்சி

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக விரிவாக்கத்துறையின் பொறுப்பு பேராசிரியர்களுக்கு சமூக ஈடுபாட்டில் கல்லூரி மாணாக்கர்களுக்கு வழிகாட்டுதலுக்கான புத்தாக்கப் பயிற்சி விரிவாக்கத்துறையில் நடைபெற்றது.

சமூகப்பணியில் ஈடுபடும் கலை மற்றும் அறிவியல் துறை மாணாக்கர்களுக்கு கிராம மற்றும் நகர்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்களை விரிவாக்கக் கல்வியின் மூலமாக செயல்படுத்துவதே செப்பர்டு திட்டத்தின் நோக்கம் என அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

புத்தாக்கப் பயிற்சிவிரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே தனது விளக்கவுரையில் கற்றலின் அறிவை சமூக மேம்பாட்டிற்காகவும் சமூகத்தில் மாணவர்களுடன் பேராசிரியர்கள் இணைந்து கிராமத்தின் தேவைகளை அறிவியல் பூர்வாகமாக ஆய்வு செய்து திட்டங்களை தயார் செய்து சமூகப் மேம்பாட்டிற்கான தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி கிராமங்களை சென்றடையும் நோக்கில் மாணவர்களும் மக்களும் பயன்பெறும் வகையில் இக்கட்டாய பாடத்திட்டம் செயல்பட்டு வருகிறது .

இக்கூட்டத்தின் நோக்கம் கலை அறிவியில் துறை மாணவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பத்தை கொண்டு சமூகப்பணியில் ஈடுபடும் போது அவர்களின் தேவைகளை தீர்க்கும் வழிமுறையாக மாணவர்களை அறிக்கை தயார் செய்தல் திட்டமிடுதல் தீர்க்கும் வழிமுறைகள் எவ்வாறு கையாள வேண்டுமென்று பேராசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.     

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம் பெரும் நிறுவனத்தின்  சமூகப் மேம்பாட்டு நிதி அரசு சாரா அமைப்பு  இவற்றுடன் தொடர்பு கொண்டு சமூகத்தின் அடிப்படை மேம்பாட்டு தேவைகளுக்கான திட்டங்களை தயார் செய்து ஆய்வுகளை சமர்பித்து பணிகளை நிறைவு செய்வதன் மூலம் கிராம மற்றும் நகர் புற பின்தங்கிய பகுதிகளின் மக்களின் சமூக பொருளாதார மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்தில் வளர்வதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் ஆய்வு மற்றும் இத்திட்டங்களை செயல்படுத்தும் பேராசிரியர்கள் முதன்மை ஆய்வாளராக கருதப்படுவார் அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் விரிவாக்கத்துறை கடந்த 40 வருடமாக செய்து கொண்டிருக்கும் சமூகப்பணியின் நோக்கம் செயல்பாடு திட்ட விளக்கங்களைப் பற்றி எடுத்துக் கூறினார்

இந்நிகழ்ச்சியின் இறுதியில் பேராசியர்களுடனான  கலந்துரையாடலில் விரிவாக்த்துறையின் மூலம் அனைத்து துறைகளின் கலை மற்றும் அறிவியல் தொழில் நுட்ப சமூக மேம்பாட்டு பணிகள்; அனைத்து இடங்களுக்கும் சென்றடைய வேண்டுமென்றும் மேலும் விரிவாக்கக் கல்வியை மாணவர்கள் எளிமையாக கையாளும் வழிமுறைகளை செயல்படுத்த வேண்டுமென கருத்துகளை பகிர்ந்தார்கள்.

ஒருங்கிணைப்பாளர் சுதாகர் வந்தவர்களை வரவேற்றார் முடிவில் ஒருங்கிணைப்பாளர் யசோதை நன்றி கூறினார். முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜோசப் கிறிஸ்து ராஜா மற்றும் ரட்சனா ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் தொழில்நுட்ப உதவிகளை செய்திருந்தார் 25 துறைகளிலிருந்து பணிமுறை 1 மற்றும் 2 என இருபால் பேராசிரியர்கள் 51 பேர் கலந்து கொண்டார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.