அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் “ஜி.டி.என்“

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு : வர்கீஸ் மூலன், விஜய் மூலன், ஆர்.மாதவன், சரிதா மாதவன். இயக்கம் : கிருஷ்ணகுமார் ராம்குமார், நடிகர்-நடிகைகள் : ஆர்.மாதவன், துஷாரா விஜயன், பிரியா மணி, சத்யராஜ், ஜெயராம், அதிதி பாலன், கருணாகரன், வினய், மோகன்ராம், ஷீலா ராஜ்குமார், டி.ஜே.அருணாசலம், தம்பி ராமய்யா, பிரிகிடா சாகா, ஜான்விஜய், கிருஷ்ணா, ஒளிப்பதிவு : அரவிந்த் கமலநாதன், இசை : கோவிந்த் வசந்தா, வசனம் : முகில், எடிட்டிங் பிஜித் பாலா, கே.சசிகுமார், காஸ்ட்யூம் டிசைனர் : ஜிஷாத் சம்சுதீன், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.

கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் 1893-ஆம் ஆண்டு பிறந்து 1974-ல்[79 வயதில்] மறைந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தான் இந்த ‘ஜி.டி.என்.’ தான் உபயோகப்படுத்தும் எந்தப் பொருளாயினும் தானே கண்டு பிடித்து உபயோகித்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

“ஜி.டி.என்“அவரின் வாழ்க்கை வரலாற்றை கோவை பல்கலைக்கழக்த்தில் பாடமாக வைக்க மறுக்கிறது துணைவேந்தர் மோகன்ராம் தலைமையிலான குழு. ஏன்னா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் வரிகட்டாத மோசடிப் பேர்வழி, தனது வீட்டையே குண்டு வைத்த தகர்த்த பைத்தியக்காரன் என்ற பொய்களால் பாடத்தில் சேர்க்க மறுக்கிறார்கள். இந்தப் பொய்களை அடித்து நொறுக்கும் ஜி.டி.நாயுடுவின் உண்மை வரலாற்றைச் சொல்ல ஆரம்பிக்கிறார் அதே குழுவில் இருக்கும் பேராசிரியை  அதிதி பாலன். இங்கிருந்து தான் பார்வையாளனுக்கு படமும் பாடமும் ஆரம்பிக்கிறது. அதிதி பாலன் யார் என்பதை க்ளைமாக்ஸில் கச்சிதமாக மேட்ச் பண்ணிவிட்டார் டைரக்டர்.

கலங்கல் கிராமத்தில் பிறந்தது முதல் உலகையே கலங்கடித்த கண்டு பிடிப்புகளை வெளிப்படுத்தும் மாபெரும் புரட்சியாளர் ஜி.டி.நாயுடுவை இன்றைய தலைமுறைக்கு மிகவும் சிறப்பாக அடையாளப்படுத்த கர்ம சிரத்தையுடன் உழைத்திருக்கிறார் ஆர்.மாதவன் [ எ ] ‘ஜிடிஎன்’. வாலிப வயது நாயுடுவாக டி.ஜே.அருணாச்சலம், அவரது மனைவியாக ஷீலா ராஜ்குமார், 1930 காலகட்டம் என அனைத்துமே நமக்கு பிரமிப்பு. அதே போல் ஜிடிஎன்.னின் ஒவ்வொரு கண்டு பிடிப்பிற்கும் உந்து சக்தியாக இருந்தது எது  என்பதை பருத்தியைப் பிரிக்க பயன்படுத்தும் மிஷினைக் கண்டு பிடித்தவிதம், மோட்டார் சைக்கிளை ஓட்டுவதைவிட, அது எப்படி ஓடுங்கிறதைக் கண்டுபிடிக்க நாயுடு எடுக்கும் முயற்சி எல்லாவற்றையும் மிக நுட்பமாக காண்பித்து மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் டைரக்டர் கிருஷ்ணகுமார் ராம்குமாரும் அவருக்குப் பக்கபலமாக இருந்தவர்களும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

“ஜி.டி.என்“நடுத்தர வயதைத் தாண்டியதும் 200 பஸ்களுக்கு அதிபரான பின் காரில் வந்து இறங்கும் போது ஜி.டி.நாயுடுவை அச்சுஅசல் நம் கண்முன் நிறுத்துகிறது மாதவனின் முகபாவனையும் உடல் மொழியும். அதே போல் அரசாங்கத்தின் பழிவெறியால் தனது கண்டு பிடிப்புகளை ஊரார் முன்பு தீயிட்டுக் கொளுத்தும் போது, ஒரு நடிகையின் படத்தினை பனியனில் வைத்திருக்கும் இளைஞர்களைப் பார்த்து, “கொண்டாட வேண்டியவர்களைக் கொண்டாட மறந்துட்டீங்க, கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறீர்கள்” எனக் கோபத்தில் கொதிப்பது தற்போதைய தற்குறிக் கும்பலுக்கு செம செருப்படி. வசனம் எழுதிய சகோதரர் முகில் வாழ்க.

கோவையில் ‘ஜிடீ பென்ஸ்’ கார் தொழிற்சாலை அமைக்கும் கனவை ஆட்சியாளர்கள்[காங்கிரஸ்] சிதைத்த பின்னும் மனம் கலங்காமல், அதே நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் பாஸிட்டிவ் சிந்தனையை பார்வையாளனுக்குள் விதைத்திருக்கிறார் ஜி.டி.நாயுடு என்கிற ஆர்.மாதவன். அதே போல் தனது மோட்டார் பொருத்திய சேவிங் ரேஷர் கண்டு பிடிப்பிற்காக ஜெர்மனிக்குச் சென்று ஹிட்லரிடம் விருது பெறுவது, பிறகு அவரின் போர் முறையையை விமர்சிப்பது இதெல்லாம் ஜி.டி.நாயுடு என்கிற ‘தில்’ நாயுடுவை நம் கண்முன் கொண்டு வந்துள்ளார் ஆர்.மாதவன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாதவனுக்கு அடுத்து படம் முழுவதும் வந்து நம் மனதிற்குள் நிறைபவர் நாயுடுவின் நம்பிக்கைக்குரிய நண்பர் ராமய்யா பிள்ளையாக வரும்  நம்ம தோழர் சத்யராஜ் தான். தனது ‘ஆர்.பி.பஸ்’சை நாயுடுவிடம் விற்ற பிறகு, நாயுடுவின் பஸ்களில் என்ன கோளாறு, எங்கே கோளாறு என்பதை பஸ்ஸைப் பார்க்காமலேயே பஸ்ஸிலிருந்து வரும் சத்தத்தை வைத்தே சொல்லும் சீன் செம மாஸ் சீன். ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையின் பெரும்பாலான காலகட்டங்களில் ராமய்யா பிள்ளை பயணித்திருப்பதை நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

“ஜி.டி.என்“ஜி.டி.நாயுடுவையும் அவரது தொழிலையும் அழித்தே தீர்வது என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும் வருமானவரித்துறை அதிகாரி அம்பலக்கார கிருஷ்ணனாக ஜெயராம் ஜொலிக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸில் மனம் குமுறி நாயுடு பேசும் போது, டைட் குளோஸப்பில் ஜெயராமின் கண்கள் கலங்கும் சீன் அபாரம்.  இவர் கூடவே இருந்து குழி பறிக்கும் நபராக கருணாகரனுக்கு டபுள் ஓகே.

நாயுடுவின் முதல் மனைவி பிரியாமணியைவிட இரண்டாவது மனைவி துஷாரா விஜயனுக்குத் தான் நடிப்பதற்கு ஸ்கோப் அதிகம்.  நாயுடுவின் நண்பர்களாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கே. ஆகியோரை கரெக்டாக பதிவு செய்துள்ளார் டைரக்டர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

“ஜி.டி.என்“அரவிந்த கமலநாதனின் ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, காஸ்ட்யூம் டிசைனர், மேக்கப் கலைஞர் என எல்லோருமே ‘ஜி.டி.என்.’ என்ற இந்த உன்னத சினிமா மிகவும் சிறப்பாக வர பெருந்துணையாக இருக்கிறார்கள்.

படம் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள், கவர்மெண்ட் நியூஸ் ரீல் ஃபீலிங் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அதே போல் கொஞ்சம் பிசகியிருந்தாலும் டாக்குமெண்ட்ரி போல ஆகிவிடும். ஆனால் அதையெல்லாம் தகர்க்க சிறந்த நடிகர்-நடிகைகளை செலக்ட் பண்ணி நடிக்க வைத்து  ஜி.டி.நாயுடு என்கிற மாபெரும் சாதனையாளரை இன்றைய இளம் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்க அரிய முயற்சி எடுத்த இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் குழுவினருக்கும் நாயுடுவாக நடித்த மாதவனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அங்குசம் பார்வையில் ‘ஜி.டி.என்.’ 75/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.