வியட்நாம் படகு விபத்து – திருச்சியை சேர்ந்த 3 பேரின் உடல்கள் அடக்கம்
கடந்த 11 ந் தேதி வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். அதில் திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜன், பீமா நகர் பகுதியைச் சேர்ந்த சேக் அப்துல்லா, திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் உடல் நேற்று முன்தினம் இரவு வியட்நாமில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.
திருச்சியை சேர்ந்த 3 பேரின் உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவையிலிருந்து அமரர் ஊர்தி மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
இறந்த அழகு ராஜன் உடல் கிராப்பட்டியில் உள்ள அவர்களது இல்லத்திலும், சேக் அப்துல்லா உடல் பீமநகரில் உள்ள அவரது இல்லத்திலும், பாலாஜி உடல் திருவானைக்காவலில் உள்ள அவரது இல்லத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.
உயிரிழந்தவர்களுக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர், முன்னாள் அமைச்சர் கே என் நேரு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இதில் அழகு ராஜன் உடல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பி.வாகைகுளம் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட்டது.
ஷேக் அப்துல்லாவின் உடல் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது. பாலாஜியின் உடல் இன்று அவருடைய சகோதரி அமெரிக்காவிலிருந்து வந்த பின்பு இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டு மாலை தகனம் செய்யபடுகிறது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.