அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசு வேலை மோசமான முன்னுதாரணம்!

திறந்த மடல் 28       

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு,      வணக்கம்.

கடந்த ஓராண்டிற்கு முன்பு நீங்கள் கரூரில் நடத்திய கட்சி பரப்புரையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மரணமடைந்த 41 பேரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, இளநிலை உதவியாளர் என்ற தகுதியில் அரசுப்பணியை வழங்கியிருக்கிறீர்கள். அதுவும் கடந்த ஜூலை 10 ஆம் நாள் முதல்வர் பொறுப்பில் உள்ள நீங்கள் அரசு விழாவாக அல்லாமல், த.வெ.க. கட்சியின் தலைவராக சென்ற பயணத்தில் இப்படி ஒரு நிகழ்வை நடத்தியிருக்கிறீர்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோதே, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லியும், இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 இலட்சம் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக சார்பிலும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம் வழங்கியிருந்தீர்கள். தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வழியாக, போட்டித் தேர்வை எழுதி பெற வேண்டிய பணியிடத்தை வழங்கியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. அதுவும், இந்த பணி ஒதுக்கீடுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தற்காலிகப்பணியிடங்களை வேண்டுமானால் வழங்கலாம் என்று தீர்ப்பளித்த நிலையிலும் அதையும் மீறி அரசுப்பணியை வழங்கியிருக்கிறீர்கள்.

விஜய் ரசிகர் கூட்டம்
விஜய் ரசிகர் கூட்டம்

யாவரும் கேளீர்

தற்போது பாமக கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பு வன்னியர் சங்கமாகச் செயல்பட்டபோது, நடந்த போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட வன்னியர் சங்கம் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளார். அண்மையில் இரும்பு கம்பியைச் சுமந்து சென்ற தொழிலாளர்கள் 4 பேர் மின்சாரம் தாக்கி இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லைச் சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படியே, போனால் எங்கு போய் முடியும்?

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

ஒரு கட்சியின் சார்பில் நடைபெற்ற பரப்புரையில் நடைபெற்ற நெரிசல் மரணம் சார்ந்த குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கியது என்பதை இடதுசாரிகள் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதாக விமர்சித்திருக்கிறார்கள். இதே விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் தமிழ்நாடு தேர்வாணையத்தையும் ஒரு தரப்பாக இணைத்து, அரசு வழங்கிய வேலைவாய்ப்பு பற்றிய விளக்கத்தைப் பதிவு செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

BREAKING || கரூர் செல்லும் விஜய் - தவெக திட்டம் [Karur, TVKVijay, TVK, Karurstampede, TamilNews, Newstamil, NewsTamil24x7]தவெக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரசுப் பணியை ஆதரித்துப் பேசுவோர் முன்வைக்கும் வாதம், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி தாமிர ஆலையை எதிர்த்து அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசின் சார்பில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதைப் போலத்தான் தவெக அரசு வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த வாதம் பொருத்தமற்ற வாதமாகும். கரூர் நெரிசல் மரணம் என்பது அரசு விழாவில் ஏற்பட்டதல்ல. தனியார் நடத்திய கட்சியின் சார்பில் நடந்த பரப்புரையில் நடைபெற்ற மரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

1971 இல் திமுக வெற்றி பெற்றுக் கலைஞர் மீண்டும் முதல்வரானபோது, அரசு ஊழியர்கள் இறந்தால் குடும்ப நிதியாக ஒரு இலட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார் (அப்போது தங்கம் விலை பவுன் ரூ.170/-). மேலும், இறந்தவரின் மனைவி அல்லது அவரின் 18 வயது நிரம்பிய பிள்ளைகளுக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட பணிகள் அனைத்து அடிப்படைப் பணியாளர் அல்லது துப்பரவு பணி போன்ற குரூப் தேர்வுகளால் நிரப்பப்படும் பணியிடங்கள் அல்லாத பதவிகளே வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடைபெறும் பாலியியல் வன்கொடுமைகளால் இறந்ததுவிட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் நிதியுதவி, இலவச வீட்டுமனை, வீட்டுக் கட்டி தருதல், அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படுவது என்பது அரசின் கொள்கை முடிவாக உள்ளது.

தவெக தேர்தல் பிரச்சாரத்தின்போது, சொன்ன ஆட்சி மாற்றம் என்பது இதுதானா? என கேள்வி எழுப்பும் வகையில்தான் அமைந்திருக்கிறது. உங்களோடு சினிமா துறையில் நெருக்கமாக பயணித்தவர்களுக்கெல்லாம் அரசு பதவிகள் கொடுத்து அழகு பார்ப்பதையெல்லாம் என்னவென்று சொல்வது? மக்களின் வரிப்பணத்தை தொடமாட்டேன். தொடவும் விடமாட்டேன். தொட்டவர்களையும் விடமாட்டேன் என பேசியதெல்லாம் வெறும் சினிமா டயலாக் மாதிரி ரசித்துவிட்டு கடந்து போவதற்கா? தன்னுடைய பரப்புரையில் இறந்த கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அரசு எடுத்துள்ள தவறான முடிவாகும். தவறான முன்னுதாரணம் அல்லவா? அரசு மக்கள் நலன் சார்ந்த முடிவுகளைக் கொள்கை முடிவாக எடுக்கலாம். அரசு கட்சி சார்ந்த முடிவுகளைக் கொள்கை முடிவுகளாக எடுப்பதை, எப்படி அனுமதிக்க முடியும்?

—   ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.