அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடத் தடையாக இருப்பது எது?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பிற்போக்குத்தனமும் பெண்ணடிமைத்தனமும் கோலோச்சிய காலமும் இருக்கத்தான் செய்தது. சமையலறைக்குள் அடைபட்டும்; பிள்ளைப்பெறும் இயந்திரங்களாக மட்டுமே பெண்களை பாவித்த காலம் அது. இன்றோ, நிலைமை தலைகீழ் மாற்றங்களை கண்டிருக்கிறது. குறிப்பாக, மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி போன்றோர்களின் சமூக ரீதியிலான பங்களிப்பு மகத்துவமானது.

ஆனால், துரதிர்ஷ்டமாக தற்போதைய ஜென்சி தலைமுறையில் எல்லாமே தலைகீழ் மாற்றங்களை கண்டிருக்கிறது. பெண் சுதந்திரம், பெண் உரிமை குறித்த கருத்தோட்டங்கள் கேலிக்கூத்தாகியிருக்கிறது. அதில் ஒன்றுதான், தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுப்பதைக்கூட அசௌகரியமாகவும், சுமையாகவும், அழகு கெடும் ஒன்றாகவும் கருதும் போக்கு. பிழைப்புக்கான ஓட்டத்தில் பெற்ற பிள்ளையைக்கூட பேணி பராமரிக்க முடியாத நிலை இருப்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

தாய்ப்பால் விழிப்புணர்வு பட்டிமன்றம்இத்தகைய பின்னணியில்தான், உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் நலக் குழுமம் (IAP) – திருச்சி கிளை இணைந்து, ஆகஸ்டு-05 அன்று கல்லூரி கலையரங்கில் “இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்கு தடையாக இருப்பது – நவீன வாழ்க்கை முறையா? அல்லது விழிப்புணர்வு இல்லாமையா?” என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தியிருக்கிறார்கள்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் அர்ஷியா பேகம் முன்னிலை வகித்தார். வரவேற்புரை  நிகழ்த்திய குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் ஆர். சுரேஷ்குமார்  உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தின் நோக்கம் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

விழிப்புணர்வு பட்டிமன்றத்தை  துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் நடுவராக இருந்து, நகைச்சுவை கலந்த சிந்தனையூட்டும் வகையில் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“விழிப்புணர்வு இல்லாமையே தாய்ப்பால் கொடுப்பதற்கான மிகப்பெரிய தடையாகும்” என்ற அணியில் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார், இணைப் பேராசிரியர் டாக்டர் சிவகுருநாதன் மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் பத்மபிரியா ஆகியோர் கருத்துக்களை அறிவியல் ஆதாரங்களுடனும், சமூகப் பார்வையுடனும், நகைச்சுவை கலந்து எடுத்துரைத்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

“நவீன வாழ்க்கை முறையே தாய்ப்பால் கொடுப்பதற்கான மிகப்பெரிய தடையாகும்” என்ற அணியில் இணை பேராசிரியர் டாக்டர் விஜய பாரதி, உதவி பேராசிரியர் டாக்டர் சிவகாமி சுந்தரி மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் தங்கவேல் ஆகியோர் தங்களது வாதங்களை நிகழ்கால வாழ்க்கைச் சூழல்கள், வேலைப்பளு, குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சமூக காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கினர்.

தாய்ப்பால் விழிப்புணர்வு பட்டிமன்றம்இரு அணியினரின் கருத்துகளும் பார்வையாளர்களை சிந்திக்க வைத்ததோடு, அரங்கம் முழுவதும் கைதட்டல்களையும் வரவேற்பையும் பெற்றது. இறுதியாக, தாய்ப்பால் குறித்த சரியான விழிப்புணர்வை தாய்மார்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், சமூகத்திற்கும் ஏற்படுத்துவதன் அவசியத்தை நடுவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் நலத்துறை பேராசிரியர்கள், மருத்துவர்கள், முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர் மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தாய்ப்பால் விழிப்புணர்வு வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பட்டிமன்றம், அறிவியல் தகவல்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது. இதற்கான ஏற்பாடுகளை குழந்தைகள் நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் நலக் குழுமம் (IAP) – திருச்சி கிளை இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.