தொழிற்பயிற்சி (ITI) மாணவர்கள் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு
2026-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் நேரடிச் சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50/- விண்ணப்பதாரர் Debit card / Credit card/ Net banking / UPI (Gpay, Phonepe, etc.,) செலுத்தலாம்.
மேலும் தொழிற்பயிற்சி நிலைய நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்க்காணும் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான, திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், 90424 11348, மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 94439 53420, புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) 94438 72991 என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட பிரத்திக் தாயள், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.