சார் ஒரு செய்தி சொல்லட்டுமா?
Behind Woods, Galatta, etc youtube channels எல்லாம் சினிமா சார்ந்தவற்றை வெளியிட்டு காசு பார்த்தவை. சினிமாத்தனமான மூளையில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என கலவையாக ஆட்கள் வேண்டும். பரபரப்பான சீன்கள் வேண்டும். அப்போதுதான் ரசிகர்களால் விரும்பப்படும்.
இந்த சேனல்கள் பிழைப்பு நடத்திய சினிமா துறையில் இருந்தே’ ‘அண்டாவை கொண்டா சியர்ஸ் அடிக்க’ என்ற ஓர் அரசியல்வாதி வந்தார். அதன் பிறகு தான் இவர்களும் அரசியல் பக்கம் அதிக ஆர்வம் காட்டினார்கள். சினிமாக்காரர் ஆட்சியைப் பிடித்தார்.
இவர்களுக்கு அதன் பிறகும் சண்டைக் காட்சிகள் தேவைப்படுகின்றன.
சட்டமன்றத்தில், பேரவை தலைவரால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவை வெளியே பரப்பப்பட்டால் உரிமை மீறல் பிரச்சனை வரும். சிறை தண்டனை விதிக்கப்படும். சினிமாக்காரரின் paid promotion ஆட்களான இவர்களுக்கு அந்த பிரச்சனை கிடையாது. சட்டமன்றத்தின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும் அதை ஒளிபரப்பி சினிமா தலைவனிடம் அதற்கான கூலியை வாங்கிக் கொள்வார்கள்.
அதுபோலவே, இதற்கு முன் இல்லாத அளவிற்கு அரசியல் சார்ந்த விவாதங்களை நடத்தி அதிலும் சண்டைக் காட்சிகளை எதிர்பார்க்கிறார்கள்.
சினிமாக்காரத் தலைவனிடம் காசுக்காக சோரம் போன நாஞ்சில் சம்பத் போன்ற பல கட்சி மாறிகளை வைத்து கண்டபடி பேசினால், எதிர்வினையாக என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்களின் நோக்கம் அதுதான்.
அசிங்கத்தைப் பற்றி கவலைப்படாமல் லாபத்தை மட்டுமே பார்க்கின்ற இந்தக் கூட்டம், தாங்கள் விரும்புகின்ற சினிமாத் தலைவன் போலவே எந்த எச்சைத்தனத்தையும் செய்யும்.
இனி தமிழ்நாடு இப்படித்தான்.
மாற்றம் விரும்பியவர்கள் வாழ்க
– கோவி.லெனின்







Comments are closed, but trackbacks and pingbacks are open.