ஜெயராம் & சிம்ரனின் புதிய பட பூஜை!
‘தேஜாவு‘, ‘வித்தைக் காரன்‘ படங்களை தயாரித்த ‘ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்‘ கே.விஜய் பாண்டி, ‘ரிடேக்டெட் ஸ்டுடியோஸ்‘ சஞ்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜெயராம் & சிம்ரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை சென்னையில் நடந்தது.
‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.ஒய். கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
‘வாழை‘ படத்தின் சிறுவன் பொன்வேல் , தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

டெக்னீஷியன்கள்
ஒளிப்பதிவு :தீபக்
இசை:அச்சு ராஜாமணி,
எடிட்டிங்: அருள் சித்தார்த்,
கலை இயக்குநர்: மகேந்திரன்,
நடனம்: அனுஷா விஸ்வ நாதன் ,
பிஆர்ஓ: சதீஷ் (எய்ம்)
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.