நடிகராக களம் இறங்கிய ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் ‘ஏவியேட் பிக்சர்ஸ்’ கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘டிசி’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மன,  பிக்பாஸ் 7  விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சிறப்பாக நடந்தது.

டார்க் ஹியூமர்&  த்ரில்லர் – காமெடி படமாக உருவாகவுள்ள இதில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.  முத்துக் குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இசை : யுவன் சங்கர் ராஜா, காளிராஜா ஒளிப்பதிவு: பிரதீப் காளி ராஜா, படத்தொகுப்பு: ஜி.கே.பிரசன்னா, சண்டைப் பயிற்சி: பி.சி.ஸ்டண்ட்ஸ், பிஆர்ஓ: சதீஷ் (எய்ம்)

இயக்குனர்கள் பா.இரஞ்சித், அருண் மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசிய பின்….

இளைய திலகம் பிரபு

“இப்படியொரு வித்தியாசமான படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோஷம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பான கலைஞர்கள்.  புதிய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் இயக்குநர் ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து கலந்துகொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராகுல் ஒரு சிறப்பான திரைப்படத் தயாரிப்பாளர். இந்தக் கதைக்கு ஏற்ற வகையில் என்னையும் இப்படத்தில் இணைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் சிறப்பாக உருவாகி, அனைவருக்கும் நல்ல அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்”.

இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப்

“பிரபு சாரை இந்தக் கதையில் நடிக்க வைக்கலாம் என்று ராகுல்தான் முதலில் சொன்னார். எனக்கும் அதில் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.

இந்தக் கதையில் பிரபு சார் நடிக்க ஒப்புக்கொண்டது எங்களுக்கு மிகப்பெரிய பலம். அனைவரின் ஆதரவுடனும் இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்குவோம்”.

பெயர் வைக்காத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.