சமீபத்தில் திமுக செயற்குழுவில் இயற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் கட்சிக்குள் பல அதிரடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்டச் செயலாளருக்கு 70 வயது வரம்பு, ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்க முடியும், ஒன்றியச் செயலாளருக்கு 60 வயது, கிளைச் செயலாளருக்கு 45 வயது, நகரச் செயலாளருக்கு 60 வயது, பேரூர் செயலாளருக்கு 50 வயது, மாநகராட்சி வட்டச் செயலாளருக்கு 50 வயது என்பது உள்ளிட்ட அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.
110 மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்படும் என்ற தீர்மானம், கட்சியின் அமைப்பை இன்னும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
21 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்ட திமுக அமைப்பு ரீதியாக 6 மாவட்டங்களாக இருக்கிறது. தற்போது பதவியில் உள்ள 6 மாவட்ட செயலாளர்களில், மாதவரம் சுதர்சனம் மட்டும் பொறுப்பிலிருந்து விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது.
இதில், மாதவரம் சுதர்சனம் ( வயது 67) 2012-2014 வரை திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர். 2015- தற்போது வரை சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர். சுமார் 15 வருடங்கள் மாவட்ட செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
புதிய முகங்களான மாவட்ட செயலாளர், ரேசில் உள்ளவர்களில் விருகை தனசேகர், கார்த்திக் மோகன், பிரபாகராஜா, எழிலன் நாகநாதன், ஐ பரந்தாமன், எழும்பூர் ரவிச்சந்திரன், தமிழன் பிரசன்னா, அரவிந்த் ரமேஷ், சைதை மகேஷ், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, மறைந்த ஜெ. அன்பழகன் அவரின் மகன், காரம்பாக்கம் கணபதி, சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் ரவிச்சந்திரன், இன்னும் பல புதிய முகங்கள் ரேசில் இருக்கிறார்கள்
மாவட்டம் மறு சீரமைப்பு மூலம் 10 மாவட்டங்கள் வர இருக்கிறது. இந்த மாவட்ட மறுசீரமைப்பின் மூலம் முன்னாள் அமைச்சர் பி கே சேகர்பாபு தன்னுடைய கட்டுப்பாட்டில் ஏற்கனவே வைத்திருந்த 6 தொகுதிகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல், மாவட்ட செயலாளர் மா.சு கட்டுப்பாட்டில் ஏற்கனவே இருந்த 5 சட்டமன்றத் தொகுதிகளின் அதிகாரமும் தற்போது குறைக்கப்பட இருக்கிறது .
1 )திருவெற்றியூர் ஆர் கே நகர் உள்ளடக்கிய மாவட்டம் கேபிபி. சங்கர் Ex. MLA (52) வாய்ப்பு இருக்கிறது.
2) பெரம்பூர் ராயபுரம் ஆர். டி. சேகர்Ex. MLA(60) 2011-2015 2024- தற்போது வரை மாவட்ட செயலாளர் சுமார் 8 வருடம்.
3) மாதவரம் கொளத்தூர் மாதவரம் சுதர்சனமா அல்லது புதிய முகமா தெரியவில்லை.
4 ) துறைமுகம் திருவிக (தனி ) பி கே சேகர்பாபு (63) மாவட்ட செயலாளராக 2014, ஜூன் முதல் -12 வருடம்
5 ) தியாகராய நகர் விருகம்பாக்கம் ஏவிஎம் பிரபாகராஜா Ex. MLA (38)
6) சைதை மயிலாப்பூர் மா சுப்பிரமணியம் (67) மாவட்ட செயலாளர் பொறுப்பில் 2014- தற்போது வரை 12 வருடம். இதில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த மயிலை த. வேலு (55) 2020-முதல் மாவட்ட செயலாளர் 6 வருடம் இவருக்கு வேறு மாவட்டங்களை தர வாய்ப்பு இருக்கலாம்.
7) எழும்பூர்( தனி) வில்லிவாக்கம் எழும்பூர் ஐ பரந்தாமன் Ex. MLA (48) எழும்பூர் ரவிச்சந்திரன்Ex. MLA (56) இதில் எழும்பூர் பரந்தாமனுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது .
8) அம்பத்தூர் மதுரவாயல் காரம்பாக்கம் கணபதி Ex. MLA (67)
9) வேளச்சேரி சோழிங்கநல்லூர் எஸ்.அரவிந்த் ரமேஷ் Ex. MLA (59)
10) சேப்பாக்கம் ஆயிரம் விளக்கு நே. சிற்றரசு (48) 2020-22 மாவட்ட பொறுப்பாளர், 2022- தற்போது வரை மாவட்ட செயலாளர் 6 வருடம் கார்த்திக் மோகன் (46) ஆகியோரின் பெயர் கடும் போட்டியில் இருக்கிறது.
சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மாவட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி இணையும் பட்சத்தில் எழிலன் நாகநாதன் (47) பெயரும் பரிசீலனையில் இருக்கிறது.
மீதமுள்ள அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி அனேகமாக சேப்பாக்கம் தொகுதி எந்த மாவட்டத்தில் வருகிறதோ அந்த மாவட்டத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.