மைனர் பெண்ணு என்னாச்சு மூடி மறைக்கும் போலிஸ்…
மைனர் பெண்ணு என்னாச்சு மூடி மறைக்கும் போலிஸ்…
தனலட்சுமி என்ற 16 வயது பெண் பத்து நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரின் தாய் வனிதா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால்லும், மேலும் பெண்ணின் உறவினரை காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய தேசிய மாதர் சங்கம் மற்றும் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் இன்று (27.11.2020) காலை திடீரென்று ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து காவல் நிலையத்திற்கு வந்த ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது அடிப்படையில் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் ஓரமாக அமர்ந்து காத்திருக்கின்றனர்.