“என்னை நம்பி 7 கோடி ரூபாயா?” எச்சரித்த கருணாஸ்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதையொட்டி  டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 07- ஆம் தேதி மாலை நடந்தது.

இதில் பேசியவர்கள்…..

இந்த வார அங்குசம் வார இதழில்…

தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன்

” பல நல்ல விஷயங்களுக்கு இந்தப் படம் ஆரம்பமாக இருக்கும். படக்குழுவினருக்கு இராமேஸ்வரம் மக்கள் தந்த கடின உழைப்பும் ஒத்துழைப்பும் மறக்க முடியாதது. மீடியாக்களும் இந்தப் படத்திற்கு நல்ல ஆதரவும் ஒத்துழைப்பும் தருவீர்கள் என நம்புகிறேன்”.     படத்தில் நடித்துள்ள நடிகர்கள் கான்ஸ்டபிள் சுந்தரம், கவி, தர்ஷன், பிரதீப், பாண்டி, நடிகைகள் நிரோஷா, சாஷா ஆகியோர் மிகவும் சுருக்கமாக பேசினார்கள்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘என்ன விலை’இயக்குநர் சஜீவ் பழூர், ” ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் சின்ன கருவில் இருந்து தான் பெரிய கதையானது. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்  ‘என்ன விலை’ படத்தை இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

கருணாஸ் ” 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணனின் ‘நந்தா’ வில் லொடுக்கு பாண்டியாக  எனது சினிமா பயணத்தை ஆரம்பித்தேன். இப்ப இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.  அதே இராமேஸ்வரத்தில் இப்போது ‘என்ன விலை’ படத்தில் நடிச்சிருக்கேன். நான் அதிகம் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். அதனால் மலையாள ரைட்டர், இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த படம் சாமானியர்களை பற்றியது. அதனால் தான் இயல்பான நடிகர்களை தேர்வு செய்துள்ளார் டைரக்டர். எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி ஏழு கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். நல்லா யோசிச்சுட்டுவாங்கன்னு சொன்னேன். ஆனால் அவர்களுக்கு கதை மீது நம்பிக்கை வைத்து ஷூட்டிங்கை ஆரம்பித்தார்கள். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்த படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார். எனது இருபது ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளம் விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சி. ‘நந்தா’ படத்திற்கு பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இது. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து என் மனைவி முதன் முதலாக  பாராட்டியது இந்தப் படத்தைத் தான். வக்கீலாக நடித்த நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பை பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நிச்சயம் இந்த படமும் என்னுடைய தவசிமுத்து கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்”

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.