‘பெத்லகேம் குடும்ப யூனிட்’டைப் பாராட்டிய உலகநாயகன்!
மலையாளத்தில் ரிலீஸ் ஆகி 200 கோடி வசூல் சாதனை படைத்து, கடந்த வாரம் தமிழிலும் ரிலீஸ் ஆகி வரவேற்பு பெற்ற படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. ஏற்கனவே இப்படத்தைப் பார்த்திருந்த உலக நாயகன் கமல்ஹாசனை சமீபத்தில் சந்தித்தது படக்குழு. பட உருவாக்கத்தில் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார் கமல். “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பகிர்ந்து கொண்டது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது” என்கிறார்கள் சந்தித்தவர்கள்.
இந்த சந்திப்பில் படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., தயாரிப்பாளர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, நடிகர் சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோருடன் , தமிழில் ரிலீஸ் பண்ணிய ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
— ஆண்டவர்





Comments are closed, but trackbacks and pingbacks are open.