அங்குசம் பார்வையில் ‘சர்தார்-2’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘டோக்கு’ங்கிற ஒரு கருவி மூலம் விஷவாயுவை பரப்பி, இந்திய மக்களை ஒட்டு மொத்தமாக குளோஸ் பண்ணும் கொடிய ஐடியாவில் இருக்கிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. அவருக்கு ஏன் இந்தக் கொடூர சிந்தனை? அதை சர்தார் [ கார்த்தி] எப்படி முறியடித்தார் என்பது தான் இந்த ‘சர்தார்-2’வின் கதை.

சர்தார் முதல் பாகத்தில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு எதிராக ‘ரா’ஏஜெண்டான சர்தாரைப் பேச வைத்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன்,  இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் கேடுகள், ஊசி போட்ட பிராய்லர் கோழியைச் சாப்பிட்ட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகும் இந்தியர்களின் நிலையை வில்லன் எஸ்.ஜே.சூர்யா மூலம் பேச வைத்திருக்கிறார். சில மாத்திரைகளின் பெயர்களை நேரடியாகவே சொல்லி எச்சரித்த டைரக்டருக்கு தாராளமாக சபாஷ் போடலாம். அதே சமயம் இந்திய அரசின் உளவு அமைப்பான ‘ரா’ ஏஜெண்ட் சர்தாரை, ஃப்ரண்ட்ஸ் கிளப் மெம்பர்னு ‘ரா’வின் தலைவர் ஆஷிஷ் வித்யார்த்தியே சொன்னதை தான் ஜீரணிக்க முடியல.

இந்த வார அங்குசம் வார இதழில்…

முதல் பாகத்தில் அப்பா சர்தாரின் ராஜ்ஜியம் என்றால், இதில் மகன் விஜய் பிரகாஷின்[கார்த்தி தான்] ஆக்‌ஷன் அதிரடி படத்தின் இடைவேளை வரை ஜெட் வேகத்தில் பறக்கிறது. இடைவேளைக்குப் பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ஆக்‌ஷனில் தூள் கிளப்பியுள்ளார்கள். ஆகாயத்தில் பறக்கும் போர் விமானத்தில் சர்தார் கார்த்தியும் அவரின் கூட்டாளி ஷாராவும் [மாளவிகா மோகனன்] போடும் ஸ்டண்ட் சிலிர்ப்பு என்றால், ஓடும் ரயிலில் மகன் கார்த்தியின் ஆக்‌ஷன் வேற லெவல். அதே போல் க்ளைமாக்ஸில் ரோப் காரில் எஸ்.ஜே.சூர்யா, கார்த்திகள் மோதும் காட்சியில் சி.ஜி.ஒத்துழைப்புடன் மிரட்டியிருக்கிறார்கள். அடேங்கப்பா…. ரொம்ப பிரமாதம் என சொல்ல வைத்திருக்கிறார்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் திலீப் சுப்பராயனும் சேத்தன் டிசோஸாவும்.

இதற்கடுத்து பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்திருப்பது ஆர்ட் டைரக்டர்கள் எம்.எஸ்.பி.மாதவன்,பி.சேகர், கேமராமேன் ஜார்ஜ் வில்லியம்ஸ் கூட்டணி தான். டைரக்டர் பி.எஸ்.மித்ரனின் சிந்தைக்குள் இருந்ததை சீனுக்குள் கொண்டு வந்து சிலிர்ப்பூட்டுகிறது மேற்படி மூவர் கூட்டணி.

Sardar 2 Twitter Review: கார்த்திக்கு பிளாக்பஸ்டரா இல்லை...:சர்தார் 2  ட்விட்டர் விமர்சனம்சர்தாராக வயதான கெட்டப்பிற்கு ஏற்ற உடல் மொழி, பேச்சு, ரா ஏஜெண்டுக்குரிய பிரைன் ஆக்டிவிட்டீஸ் இதிலெல்லாம் அப்பா கார்த்தியும் ஆஷிமா ரங்கநாத்துடன் சேர்ந்து ஆக்‌ஷன் களத்தில் மகன் கார்த்தியும் கவனம் ஈர்க்கிறார்கள். இந்த மாதிரியான ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளில் லைட்டா ரொமான்ஸும் காமெடியும் இருந்தா தப்பேயில்லை டைரக்டரே. அதை ஏன் கட் பண்ணுனீகன்னு தெரியல. யோகிபாபு இருந்தும் சிரிக்க வைக்க முடியலையே…அதனால் தான் சொல்றோம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இடைவேளைக்குப் பிறகு படம் கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பிக்கும் போது எண்ட்ரியாகியாகிறார் எஸ்.ஜே.சூர்யா. பிராய்லர் கோழியப் பத்தி யோகிபாபுவிடமும் நிழல்கள் ரவியிடமும் அவர் பேசும் சீனில் சும்மா புகுந்து விளையாடிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. தியேட்டரே அதிருது.  அதே போல் சர்தாரிடம் பேசும் போது “பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை ஒழிக்கணும்னு நீ சொன்ன. ஆனா எவனாவது கேட்டானா? உன்பக்கத்துல இருக்குறவனே வாட்டர் பாட்டில் வச்சிருக்கான்” என பொளந்து கட்டிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.

ஆஷிமா ரங்கநாத், மாளவிகா மோனகன், பழைய வில்லன் நடிகர் பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல், ரஜிஷா விஜயன், என ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்டுகள் இருக்கிறார்கள்.

‘சர்தார்-2’வின் ஆகப்பெரிய ப்ளஸ், மனித சமூகத்தின் மீதான  டைரக்டர் பி.எஸ்.மித்ரனின் அக்கறை. மிகப்பெரிய மைனஸ், மூன்று மணி நேரம் படம் ஓடுவது.

அங்குசம் பார்வையில் ‘சர்தார்-2’ 43/100

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.