செப்டம்பர் 16-ல் திருச்சியில் போக்குவரத்து மாற்றம்! ஆட்சியர் அறிவிப்பு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் விநாயகர் சிலை “ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் விநாயகர் சிலை “ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வருகின்ற 16.09.2026 மாலை 6.00 மணி முதல் மறுநாள் 17.09.2026-ந் தேதி காலை 6.00 மணி வரை போக்குவரத்து   மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்துள்ளார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

  1. நகரப் பேருந்துகள் நம்பர் ஒன் டோல்கேட் வழித்தடம்:

நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, வலதுபுறமாக அம்மா மண்டபம் வழியாகச் சென்று ஸ்ரீரீரங்கம் பெரிய கோபுரம் திருவானைக்காவல் வழியாக, மீண்டும் தங்களது வழித்தடத்தில் செல்ல வேண்டிய ஊர்களுக்கு இயக்கப்பட வேண்டும்.

  1. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகள்:

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையத்துடன் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

  1. புறநகர் பேருந்துகள் டிவிஎஸ் டோல்கேட் வழித்தடம்:

துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து புறநகர் பேருந்துகளும் புறவழிச்சாலை வழியாக பால்பண்ணை டிவிஎஸ் டோல்கேட் சென்று, பழைய மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைய வேண்டும். அங்கிருந்து மீண்டும் தங்களது வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும். அண்ணாசிலை முதல் ஓடத்துறை, சஞ்சீவி நகர் வழியாகவும், மாம்பழச்சாலையில் இருந்து அண்ணாசிலை வழியாகவும் எந்தவிதமான வாகன போக்குவரத்திற்கும் அனுமதியில்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் தேவைப்பட்டால் மாலை 06.00 மணிக்குமேல் TVS Tollgate, HPO வழியாக மத்திய பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

பஞ்சப்பூர் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பாலக்கரை வழியாக செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் மாலை 06.00 மணிக்குமேல் HPO, பாலக்கரை, வழியாக செல்லக்கூடாது அதற்கு பதிலாக MGR சிலை, Student Road, Sasthri Road மார்க்கமாக செல்ல வேண்டும்.

மேலும், வருகின்ற 16.09.2026-ந் தேதியன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளை காவேரி ஆற்றில் கரைக்க பின்வரும் வழிதடங்கள் பயன்படுத்தவுள்ளன.

  1. பெரம்பலூர் அரியலூர் லால்குடி சாலைகளின் வழியாக வரும் மண்ணச்சநல்லூர் விநாயகர் சிலைகள் நெ.1 டோல்கேட் CP-6, திருவானைக்காவல் வழியாக காவேரியாற்றின் இடதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும். மாம்பழச்சாலை
  2. திருவெறும்பூர் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் பாலக்கரை- காந்திமார்க்கெட் ஆர்ச்-பெரியகடைவீதி- அண்ணாசிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும்.
  3. புதுக்கோட்டை சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் டி.வி.எஸ் டோல்கேட் HPO, காந்திமார்க்கெட் ஆர்ச் பெரியகடைவீதி- அண்ணாசிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும். பிரபாத் ஜங்ஷன்- அஞ்சுமன் பஜார் (காயிதே மில்லத் சாலை) பெரியமிளகுபாறை ஸ்டூடன்ஸ் ரோடு 4. திண்டுக்கல் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் பொன்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெஸ்ட்ரி ரவுண்டானா MGR சிலை சாஸ்திரி ரோடு KT ஜங்ஷன் கரூர் பைபாஸ் ரோடு அண்ணாசிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்ல வேண்டும்.
  1. வயலூர் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் புத்தூர் 4 ரோடு- சவுத் ஆர்ச்-நார்த் ஆர்ச்- KT ஜங்ஷன் கரூர் பைபாஸ் ரோடு அண்ணாசிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்ல வேண்டும்.
  2. குழுமணி சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் வெக்காளியம்மன் நகர், ஜங்ஷன்-சாலைரோடு நார்த் ஆர்ச் KT ஜங்ஷன் கரூர் பைபாஸ் ரோடு அண்ணாசிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்ல வேண்டும்.

மேலும் சரக்கு வாகனங்களுக்கு கீழ்கண்டவாறு மாற்றுவழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.

 

விநாயகர் சிலை “ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள வழித்தடங்களை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.