வங்கி அதிகாரிகளை அலறவிட்ட எஃப்.ஐ.ஆர். 74/2024 !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கோவை மாநகர குற்றப்பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டில் பதிவான எஃப்.ஐ.ஆர்களில் ஒன்றுதான் 74 எண் கொண்ட அந்த எஃப்.ஐ.ஆர். சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவ பாண்டியன், சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த பகீர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பதிவான எஃப்.ஐ.ஆர்.

 

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்; அந்த எஃப்.ஐ.ஆர். மீதான போலீசாரின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் வழக்குகள். நிறைவாக, இந்த எஃப்.ஐ.ஆர் மீதான விசாரணையை குற்றச்சாட்டுக்கு ஆளான வங்கி அதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டுமென்று ஏற்கெனவே அமலில் இருந்த தடையை நீக்கி அதிரடி உத்தரவை கடந்த 28.08.2026 தேதியன்று நீதியரசர் பரதசக்ரவர்த்தி பிறப்பித்திருந்தார்.
மேற்படி எஃப்.ஐ.ஆரும் கூட, எடுத்த எடுப்பில் பதிவாகவிடவில்லை. 12.12.2023 தேதியிட்டு அவர் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரை போலீசார் ஏற்க மறுத்த நிலையில், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 7 இல் வழக்கு தொடுத்து, 05.08.2024 இல் கிடைக்கப்பெற்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை மாநகர ஆணையாளர் சட்ட ஆலோசகரிடம் கருத்துரு பெற்று, இறுதியாக 14.11.2024 இல்தான் எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கிறது. ஒரு எஃப்.ஐ.ஆரை பதிவு செய்யவே, ஏறத்தாழ ஓராண்டு சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவலம்.
எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகும்கூட, முறையான போலீசாரின் விசாரணையை எதிர்கொள்ளாமல், அடுத்தடுத்து நீதிமன்றத்தில் தடை உத்தரவுகளை வங்கி அதிகாரிகள் பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்து வந்த நிலையில்தான், இப்படி ஒரு அதிரடி உத்தரவை நீதியரசர் பரதசக்ரவர்த்தி பிறப்பித்திருக்கிறார்.
போலீசாரின் விசாரணைக்கே ஒத்துழைக்காமல், வழக்கை வருட கணக்கில் இழுத்தடிக்கும் அளவுக்கு, வங்கி அதிகாரிகளை அலறவிட்டிருக்கும் அந்த எஃப்.ஐ.ஆர். 74/2024 இல் அப்படி என்னதான் இருக்கிறது? விரிவாக அலசுகிறது இந்த காணொளி!
– அங்குசம் புலனாய்வுக்குழு.

முழுமையான வீடியோவை காண :

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.