கலைமகள் சபா: விண்ணப்பிப்பது எப்படி?
கலைமகள் சபாவில் பணம் செலுத்தி தீர்வுக்காக காத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விண்ணப்பிப்பது தொடர்பாக தனி அலுவலர் ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். விரிவான அறிவிப்பு ஒன்றை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ பணம் செலுத்திய உறுப்பினர்கள், உறுப்பினர் எண்ணை ஆதாரமாகக் கொண்டு விண்ணப்பிக்கலாம். இறந்த உறுப்பினர்களின் வாரிசுகளும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண், உறுப்பினர் விவரம், வங்கி கணக்கு, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. முதற்கட்ட விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு, கலைமகள் சபா நிர்வாகத்தின் சரிபார்ப்புக்குப் பிறகு தற்காலிக கடவுச்சொல் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மீண்டும் உள்நுழைந்து விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். வாரிசுகள் விண்ணப்பிக்கும் போது இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் பிற வாரிசுகளின் ஒப்புதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான தகவல்களுக்கு … வீடியோவைக் காண
👇👇👇
Comments are closed, but trackbacks and pingbacks are open.