அட்லீயின் ‘அக்லி’ பிளான்! அடித்து நொறுக்கிய விஜய் சேதுபதி!
லீடர்னா யாரு? லீடர்ஷிப்னா என்ன?ன்னு தற்குறித் தலைவனை பிக்பாஸ் வீட்டில் பத்து நாட்களுக்கு முன்பு பிரிஞ்சு மேய்ச்சாரு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. தமிழ்நாடே விஜய் சேதுபதியைக் கொண்டாடியது. ஆனால் தற்குறித் தலைவனின் யூடியூப் கூலிப்படைகள் வி.சே.மீது பாய்ந்து பிராண்டின. இந்த கொதி நிலையில் தான் மும்பையைச் சேர்ந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்களின் ‘சப்போர்ட்’டுடன் இங்கே இருந்து மும்பையில் கும்மியடிக்கும் டைரக்டர் அட்லீயின் தயாரிப்பு மேற்பார்வையில் உருவாகியிருக்கும் படம் விஜய் சேதுபதியின் ‘பத்தா’. இந்த ‘பத்தா’வின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதாகச் சொல்லி, ‘த.த’வின் நிதி அமைச்சரும் உருட்டுக்கட்டை ஃபேமஸுமான மரிய வில்சனின் மாமனார் ஜேப்பியாரின் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் ஏற்பாடுகளைச் செய்தார் அட்லீ.

கல்லூரியின் சேர்மனும் ஜேப்பியாரின் மகளுமான மரிய ஜீனா ஜான்சனையும் வற்புறுத்தி அழைத்திருக்கிறார் அட்லீ. ஏன்னா ஜேப்பியாரின் கல்லூரியில் விழா நடத்தி மாணவர்களை விசில் அடிக்க வைத்து விஜய் சேதுபதியை வெறுப்பேத்த வேண்டும், கடுப்பாக்க வேண்டும் என அட்லீ போட்ட ‘அக்லி’ பிளான் தான் இது. ஆனால் இது எதையுமே கண்டு கொள்ளாமல் கேஷுவலாக விழாவுக்கு வந்து சேர்ந்தார் விஜய் சேதுபதி.

டைரக்டர் பாலாஜி தரணீதரனுடன் விஜய் சேதுபதி இணையும் மூன்றாவது படமான இதில் லிஜோமோல் ஹீரோயினாக நடித்துள்ளார். மனைவி பிரியாவுடன் வந்தார் அட்லீ. இவர் எதிர்பார்த்தது போலவே மரிய ஜீனா ஜான்சனும் வந்தார். மேடையில் பேசும் போது, “என் புள்ள, என் குழந்தை” என அட்லீயைப் பத்திப் பேசியவர், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என பொதுவாக பேசி, விஜய் சேதுபதி பெயரைத் தவிர்த்தார்.
படத்தில் பாட்டெழுதிய கார்த்திக் நேத்தா, தமிழ், எடிட்டர், கேமராமேன், ஆர்ட் டைரக்டர், ஆகியோர் வழக்கம் போல் ‘பத்தா’வின் சிறப்பு குறித்துப் பேசினார்கள். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட டைரக்டர்கள் பாக்யராஜ் கண்ணன், சிபிச் சக்கரவர்த்தி ஆகியோர் விஜய் சேதுபது குறித்தும் அட்லீ குறித்தும் சிலாகித்துப் பேசினார்கள்.

தயாரிப்பாளர்கள் அஜீத் ஆந்த்ரே, முராத் கெதானி ஆகியோர் பேசும் போது, “இந்தியில் பல படங்களைத் தயாரித்திருந்தாலும் தமிழ் சினிமா எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கு” என்றனர்.
அட்லீயின் பேச்சைக் கேட்டு தமிழ்நாடே காரித்துப்பிக் கொண்டிருப்பதையும் அக்லித்தனமான பேச்சை சோஷியல் மீடியாக்களில் வெளுத்துக்கட்டுவதையும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசும் போது, தற்குறி அட்லீயின் பேச்சு பற்றி எதையுமே குறிப்பிடாமல் லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணி, அட்லீயின் ‘அக்லி’ பிளானை அடித்து நொறுக்கிவிட்டார்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.