சர்க்கரை நோயிலிருந்து விடுதலை – முகநூலில் மெகா மோசடி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழர்களின் உணவு முறையிலும், உணவு உண்ணும் நேரங்களிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக 25 வயது தொடங்கி நீரழிவு என்னும் சர்க்கரை நோய் எல்லாரையும் ஆட்கொள்கிறது. அதற்கு முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உடல் பருமன் ஆவது, உடலில் காயங்கள் ஏற்பட்டால் ஆறாமல் நீண்டநாள் இருப்பது. சீழ்பிடிப்பது தொடர்ந்து கால் விரல்கள், கால் அப்புறப்படுத்துவது என்பவை நிகழ்கிறது. இதில் பெரும்பாலோனார் உரிய சிகிச்சையை எடுத்துக்கொண்டும் அதற்கான மாத்திரைகளும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர் சொல்லும் உணவு முறைகளை 50% கையாளுவது… பின்னர் கைவிடுவது என்ற மனநிலையும் தொடரும் நிலையும் மக்கள் மனத்தில் உள்ளது.

இந்நிலையில் முகநூலில் புற்றீசலைப் போல் சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல. இன்சூலின் சுரப்பது என்பதன் குறைபாடுதான். அதற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டாம். 30 நாளில் சர்க்கரை நோயிலிருந்தும் அதற்கான மாத்திரைகள் சாப்பிடுவதிலிருந்து விடுதலை பெறலாம் என்ற வகையில் பல நூறு அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. அதில் எல்லாரையும் சுண்டி இழுக்கக்கூடிய செய்தி என்னவெனில், சர்க்கரை நோய் ஏற்பட்டால் முதலில் செக்ஸ் உணர்ச்சிகள் குறையும் என்பதுதான்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

முகநூலில் தொடர்புக்கு என்பதைச் சொடுக்கினால் ஒரு பதிவு படிவம் வருகின்றது. அதில் நம்முடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் என எல்லாம் உள்ளது. மேலும் நம் வயது, சாப்பிடுவதற்கு முன் நம்முடைய சர்க்கரை அளவு, சாப்பிட்ட பின் நம் சர்க்கரையின் அளவைக் குறிக்கவேண்டும். அதன் பின் பதிவு செய்தால் நம்முடைய வாட்ஸ்ஆப்-க்கு செய்தி வருகின்றது. இந்த நாளில், இத்தனை மணிக்கு நீங்கள் இணைய வழியில் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு வருகின்றது.

இணைய வழி மீட்டிங்கில் சர்க்கரை நோயின் வரலாறு விலாவாரியாக படங்களுடனும் பாகங்கள் குறித்தும் விவரிக்கப்படுகின்றது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கிவிட்டால் சர்க்கரை அளவு குறையும். பின்னர் முறையான வறுத்த, பொறித்த உணவுகளைச் சாப்பிடாமல் கலோரி குறைவான உணவுகளை உண்ணவேண்டும். காய், கறி, கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும். முறையான உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகின்றது. 60 நிமிடங்களில் மீட்டிங் முடிந்துவிடுகின்றது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அடுத்தநாள் ஒரு பெண்மணி நம்முடைய அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு,“மீட்டிங் உங்களுக்குப் பயனுடையதாக இருந்ததா? புரிந்தததா?” என்று கேட்கிறார். பின்னர் “சர்க்கரை என்னும் இந்த நீரழிவு நோயிலிருந்து நீங்கள் முழுமையாக விடுதலை பெற டாக்டர் நீங்கள் பின்பற்றவேண்டிய உணவு முறைகள், உடற்பயிற்சிகள் குறித்து உங்களுக்குச் செய்திகளை வாட்ஸ்ஆப் – மூலம் அனுப்பி வைப்பார். அதற்கு நீங்கள் ரூ.3,500/- அனுப்பி வைக்கவேண்டும்” என்று சொல்லப்படுகின்றது.

அதில் கலந்துகொண்ட ஒருவர் அங்குசம் செய்தி இதழிடம் பேசும்போது,“அந்தப் பெண்மணி தொகை கேட்டவுடன், உங்கள் மருத்துவமனையின் முகவரியைக் கொடுங்கள். நான் நேரில் வருகிறேன். என்னை உடலை முழுமையாக சோதனை செய்து, பின்னர் நீங்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்கிறேன். நாங்கள் சொல்லும் தகவலை வைத்துக்கொண்டு, பொத்தாம் பொதுவாக எங்களுக்கு ஆலோசனை சொல்வதை ஏற்கமுடியாது” என்றவுடன் அந்தப் பெண்மணி,“எங்கள் மருத்துவம் இணையவழியில் மட்டும்தான் நடைபெறுகின்றது. இதன் மூலம் சுமார் 5 இலட்சம் பேர் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை அடைந்துள்ளனர்” என்று சொல்லி போனை கட் செய்துள்ளார்.

இணைய வழியில் பல்வேறு மருத்துவர்கள் குறிப்பாக நம் தமிழ்நாட்டைச் சார்ந்த சித்தமருத்துவர் கு.சிவராமன் நீரழிவு நோயிலிருந்து விடுதலை பெற மாவு சத்து உள்ள உணவுகள் மற்றும் கிழங்கு வகைகளைக் குறைத்து சாப்பிடவேண்டும். கீரை, முட்டை, பயிறு வகைகள், மாதுளை, பப்பாளி, கொய்யா, ஆப்பிள், நெல்லிக்காய் போன்ற பழவகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். இரவில் 10.00 மணிக்கு உறங்கி காலை 5.00 மணிக்கு எழுந்து நடைபயிற்சி முடித்து, சில உடற்பயிற்சிகளை முடிக்கவேண்டும். காலை 6.00 மணிக்கு லெமன் டீ, 9.00 மணிக்கு இரண்டு இட்லி+2 வேக வைத்த முட்டை+வேகவைத்த பயறுவகைகள் 11.00 மணிக்கு பழங்கள் சாப்பிடுவது மதியம் 1.00 மணிக்கு சிறுதானிய உணவு+காய்கறிகள்+கீரை+வெங்காய பச்சடி மாலை 4.00 மணிக்கு வேக வைத்த பயறு மற்றும் பழங்கள் இரவு 7.00 மணிக்கு காய்கறிகளோடு ரவா அல்லது கோதுமை உப்புமா+தேங்காய் சட்னியோடு உண்ணவேண்டும். இரவு 9.00 மணிக்கு மென்நடை சற்று ஒய்வு எடுத்து இரவு 10.00 மணிக்கு உறங்கவேண்டும் என்றும், ஆசையாக இருக்கின்றது என்று அளவுக்கு அதிகமாக பிரியாணி, புரோட்டா, எண்ணையில் வறுத்த பொறித்த எந்த உணவுகளையும் குறைவாக உண்ணவேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.

காணொளிகள் யூடியூபில் மருத்துவர் சிவராமன் உரையைக் கேட்கலாம். அறிவுசார்ந்தவை அந்த அறிவுரைகள். இவர் சொல்வதையே படம் போட்டு, பாகங்கள் குறித்து இணைய வழியில் ஏதோ புதிய மந்திரத்தைச் சொல்லி சர்க்கரை நோயை நீக்குகிறோம் என்பதுபோல் சொல்லி தொகை கேட்பது ஒருவகையில் மோசடியே. இதுபோன்ற உடல் நலம் சார்ந்த மனநலம் சார்ந்த அறிவுரை சொல்கிறோம் என்னும் இந்த மோசடிகளிலிருந்தும் நம் தப்பித்துக் கொள்ளவேண்டும்.

—   ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.