தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளியின் சிறப்புக் கருத்தரங்கம்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புல அவையத்தில் (23.09.2026) சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில்…

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீமான் இளையராஜா அனைவரையும் வரவேற்றார். பதிவாளர் (பொ) முனைவர் வெற்றிச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் களப்பிரன் அவர்கள்  “ஒளி படா தமிழ் ஒளி” என்ற பொருண்மையில் கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள், சிறார் இலக்கியங்கள் குறித்து ஆய்வு நோக்கில் உரையாற்றினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இலக்கியத்துறையின் தலைவர் பேராசிரியர் பெ.இளையாப்பிள்ளை அவர்கள் “கவிஞர் தமிழ் ஒளி கவிதைகளில் விழுமியங்கள்” என்ற பொருண்மையில் உரையாற்றினார்.

நிறைவாக முனைவர் பட்ட ஆய்வாளர் கனிமொழி அவர்கள் நன்றி கூறினார்..

நிகழ்வில்..

மேனாள் பேராசிரியர் அரங்கன் பேராசிரியர்கள் இரா.காமராசு, தியாகராஜன், இரா.குறிஞ்சிவேந்தன், இரா.சு.முருகன், கோ.ப.நல்லசிவம், தேவிவீரமணி,வெங்கடேசன், சிவராமன், இரமேஷ் குமார்,தனலெட்சுமி உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பணியாளர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.