பனை வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம்!
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மனையியல் துறை சார்பில், ஆத்தூர் தாலுகா செட்டியபட்டி ஊராட்சியில் செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை கிராம தங்கல் திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் கிராமங்களில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலையபட்டிக்கு அருகிலுள்ள செங்குளம் பகுதியில் சைல்ட் வாய்ஸ் மற்றும் வைகை டிரஸ்ட் ஆகியவற்றின் நிறுவனர் S.அண்ணாதுரை அவர்களின் உதவியுடன் 100 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பஞ்சநதம் அவர்கள் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மனையியல் துறை மூத்த பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் R.I. சத்யா, மூத்த பேராசிரியர் டாக்டர் K.S. புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் டாக்டர் S. கவிதா மைதிலி அவர்கள் செய்திருந்தார்.
சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் ரமேஷ், பிரகாஷ், பிரணவன்,மாரீஸ்வரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பனை மரங்களின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இந்நடவு நிகழ்ச்சி நடைபெற்றது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.