நாங்கள் என்ன இரவு நேர காவலாளிகளா? குமுறும் சிறைத்துறை போலீசார் !

ஜெயில் பரிதாபங்கள் – 10

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகத்தில் சீருடைப்பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் ஒரே மாதிரியான தகுதி – தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், போலீஸ், தீயணைப்புத்துறை போலீசாருக்கு கிடைக்கக்கூடிய பதவி உயர்வுகளும் சம்பள விகிதங்களும் தங்களுக்கு இல்லை என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்கள் சிறைத்துறை காவலர்கள்.

சிறைத்துறையின் ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள் உத்தரவின் பேரில் போலீசார் அணியும் தோள்பட்டை பேட்ஜில் TNP (Tamilnadu police / prison)   என்பதை TNJ (Tamilnadu Jail) என்பதாக மாற்றியமைத்தார்கள். இத்தகைய எழுத்துப்பூர்வமான மற்றும் தோற்ற அளவிலான மாற்றங்களால் பைசா காசு பிரயோஜனம் இல்லை என்பதே அவர்களின் மனக்குமுறலாக இருந்து வருகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

பதவி உயர்வும் இல்லை. சம்பளத்திலும் ஏகப்பட்ட முரண்பாடுகள். சரி, சமூக மதிப்பாவது இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை என்றே வேதனையை தெரிவிக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவான Warder – காவலாளி என்ற சொல்தான் இன்றுவரை புழக்கத்தில் இருக்கிறது. நாங்கள் என்ன இரவு நேரக் காவலாளிகளா? என கேள்வி எழுப்புகிறார்கள். சர்வதேச அளவில் Warder – காவலாளி என்ற சொல் கைவிடப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக அந்த பதவிக்குரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கும் வகையில் Correctional Officer – சீர்திருத்த அலுவலர் என்ற சொல்தான் புழக்கத்தில் இருந்து வருகிறது.

குறிப்பாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் Correctional Officer என்றே அழைக்கப்படுகிறார்கள். இங்கிலாந்தில், Prison Officer / Custodial Officer என்று அழைக்கப்படுகிறார்கள். சிங்கப்பூரில், Personal Reformation Officer / Captain ) என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், தமிழகத்திலோ, துறையின் பெயரில்தான், “தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை” என்பதாக இருக்கிறதோ ஒழிய, சிறைக்காவலர்கள் இன்றளவும் காவலாளி யாகவே கருதப்படுகிறார்கள். அவ்வாறே அழைக்கப்படுகிறார்கள். இது எப்பேர்பட்ட அநீதி?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தற்போதைய பதவிப்பெயர்களாக வழங்கப்பட்டு வரும் Grade II Warder, Grade I Warder, Head Warder என்பதை, நிலை II சீர்திருத்த அலுவலர், நிலை I சீர்திருத்த அலுவலர், தலைமை சீர்திருத்த அலுவலர் என்பதாக பதவி பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இன்னும் குறிப்பாக, காவல்துறையில் பதவி உயர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், தேக்கநிலையைத் தவிர்க்கவும் சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI)  பதவி நிலைகளில் மாற்றம் செய்யப்பட்டது போல, Chief Head warder (CHW) என்ற பதவியை முற்றிலுமாக நீக்கிவிட்டு, இந்த நிலையிலிருந்து நேரடியாக அடுத்த நிலை அதிகார பதவிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் சிறைக்காவலர்கள் முன்வைக்கிறார்கள்.

சிறைச்சாலை என்பது வெறுமனே தண்டனை வழங்கும் இடமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, உணர்ச்சிவயப்பட்டோ எதிர்பாராத நிகழ்வுகளில் சிக்கி சிறைபடும் சிறைவாசிகளைக்கூட, அவர்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்த மையமாக இயங்க வேண்டும் என்ற நோக்கில்தான் துறையின் பெயரிலேயே, சீர்த்திருத்த துறை என்ற வாசகம் சேர்க்கப்பட்டது.

ஆனால், சிறைக்கைதிகளை சீர்திருத்தும் உன்னத பொறுப்பேற்றிருக்கும் சிறைக்காவலர்களை, ”காவலாளி” என்ற அடைமொழியிட்டு அழைப்பது எத்தகையதோர் முரண்?

–     அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.