அங்குசம் பார்வையில் ‘அன்பில் அவன்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: ஐங்கரன் கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம், ஆர்டிஸ்ட்: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமத், சீனியர் நடிகை ரேவதி ( சிறப்புத் தோற்றம்) ஒளிப்பதிவு: கெளதம் ராஜேந்திரன், இசை: கோவிந்த் வசந்தா, எடிட்டிங்: ஆர்.கே.செல்வா, ஸ்டண்ட் மாஸ்டர்: பீட்டர் ஹெய்ன், ஆர்ட் டைரக்டர்: மணிகண்டன் ஸ்ரீனிவாசன், பிஆர்ஓ: யுவராஜ்.

வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்து கல்யாணம் செய்து கொள்ளும் அசோக் செல்வனும் பரீத்தி முகுந்தனும் வெவ்வேறு ஸ்டார் ஓட்டல்களில் வேலை செய்கிறார்கள். ஒருமுறை ஓட்டலின் எச்.ஆரால் அவமானத்திற்குள்ளாகிறார் அசோக்செல்வன். அதே போல் பெண் மேலதிகாரியால் தனது மனைவி அவமானப்படுவதையும் நேரில் பார்த்து ரொம்பவும் நொந்து போகிறார் அசோக் செல்வன். இதனால் தனியாக ’ஹோம் ஸ்டே’ [ ரிசார்ட்] ஒன்றை ஹில் ஸ்டேஷனில் சொந்தமாக வாங்கி, முதலாளியாகும் லட்சியத்தில் மதுரை அருகே உள்ள ஹில் ஸ்டேஷனில் பழைய வீடு ஒன்றைப் பார்க்கிறார்கள். அந்த வீட்டின் ஓனர் ரேவதியிடம் பேசி, பத்திரம் பதிவு செய்யப்போகும் போது லோக்கல் எம்.எல்.ஏ.கதிர்பாலு மூலம் அக்கப்போர் ஆரம்பிக்குது. அந்த அக்கப்போரை எதிர்த்து நின்று கணவனும் மனைவியும் ஜெயித்தார்களா? என்பது தான் இந்த ‘அன்பில் அவன்’.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அன்பில் அவன்அசோக்செல்வனின் டைவிங் சாகசத்தைப் பார்த்து, அவரைக் காதலிக்கிறார் ப்ரீத்திமுகுந்தன். அதன் பின் ஒருவர் மீது ஒருவர் அன்பில் திளைத்து வாழ்கிறார்கள். ஹோம் ஸ்டேவை வாங்கிய பின் தான் அவர்கள் ஹோமில் நிம்மதியில்லாமல் போகிறது. காதல், கோபம், ஊடல், கூடல் என அசோக்செல்வனுக்கும் ப்ரீத்திமுகுந்தனுக்கும் இடையே லவ் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது.

அசோக்செல்வன் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து அதகளம் பண்ணுகிறார். ஆக்‌ஷன் சீக்வென்ஸில் செமத்தியாக பெர்ஃபாமென்ஸும் பண்ணியுள்ளார். அடுத்தடுத்து இந்த கேட்டகிரியில் கண்டினியூ பண்ணுவார் போல. அதற்கான குவாலிஃபிகேஷனும் அசோக்கிடம் இருக்கு. அதே சமயம் நடிப்பிலும் குறை ஒன்றும் வைக்கவில்லை. “எல்லாமே உனக்காகத் தான், உன்னால தான்” என ப்ரீத்திமுகுந்தனிடம் கொந்தளித்துவிட்டு, பின்பு மனம் உருகி மன்னிப்புக் கேட்கும் சீனில் அசோக் செல்வனின் நடிப்பு டபுள் ஓகே.

அன்பில் அவன்சுவாசப்பிரச்சனை உள்ளவராக, வாழ்க்கையில் வரிசைகட்டி வரும் பிரச்சனைகளை சமாளிக்கும் தில் உள்ளவராக ப்ரீத்திமுகுந்தனும் சபாஷ் போட வைக்கிறார். க்ளைமாக்ஸில் அசோக்செல்வனும் ப்ரீத்திமுகுந்தனும் சேர்ந்து வில்லன்களுடன் ஆடும் கதகளி ஆட்டம் செம த்ரில். [ என்ன ஒண்ணு கடைசி அரைமணி நேரம் இந்த ஃபைட் நீ….ள்வது கொஞ்சம் சலிப்பு].

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எம்.எல்.ஏ.வாக வரும் கதிர்பாலு, இவரின் கைத்தடி வக்கீலாக வரும் சாபுமோன் அப்துசமத் இருவருமே மிரள வைக்கிறார்கள்.

விக்னேஷ் ராஜாவின் கதைக்கு மெல்ல மெல்ல ஆக்‌ஷன்  டெம்போ ஏற்றி திரைக்கதையை கச்சிதமாகக் கொண்டு போயுள்ளார் டைரக்டர் ஆர்.கார்த்திகேயன். கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் இரண்டு மெலோடி & பின்னணி இசை[ குறிப்பாக க்ளைமாக்ஸ் ஃபைட்டில்] கோவிந்த் வசந்தாவும் அன்பில் அவனுக்கு நல்ல ஆதரவு.

அன்பில் அவன் ஃபேமிலி எண்டெர்டெய்ன்மெண்ட்டுக்கு க்யாரண்டி.

அங்குசம் பார்வையில் ‘அன்பில் அவன்’ 50/100

—  ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.