வேலைவாய்ப்பு செய்திகள் !
கனிம நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்படும் கனிம ஆய்வு, ஆலோசனை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 12, எலக்ட்ரிக்கல் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-28 (8.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: யு.பி.எஸ்.சி.,யின் ‘இ.எஸ்.இ., 2024’ தேர்வு மதிப்பெண்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 8.10.2026
விவரங்களுக்கு: mecl.co.in
விளையாட்டு வீரா்களுக்கு ரிசர்வ் போலீஸ் படையில் வேலை
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.,), விளையாட்டு ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘கான்ஸ்டபிள்’ 339, ‘ஹெட் கான்ஸ்டபிள்’ 182 என மொத்தம் 521 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
வயது: 18-23 (1.8.2026ன் படி)
கூடுதல் தகுதி: சர்வதேச/ தேசிய/ பல்கலை போட்டிகளில் சான்றிதழ்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு / உடல் தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 11.11.2026
விவரங்களுக்கு: rect.crpf.gov.in
இந்தோ–திபெத் – கான்ஸ்டபிள் வேலை
இந்தோ-திபெத் எல்லை போலீஸ்’ படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஹெட் கான்ஸ்டபிள்’ (மோட்டார் மெக்கானிக்) பிரிவில் மொத்தம் 21 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,
வயது: 18-25 (27.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 27.10.2026
விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in
ராணுவத்தில் வேலை
துணை ராணுவத்தை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரைபிள்மேன் 225, வாரண்ட் அதிகாரி 128 உட்பட மொத்தம் 354 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ
வயது: 18-25 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 28.10.2026
விவரங்களுக்கு: assamrifles.gov.in
கடலோர காவல்படையில் வேலை
இந்திய கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்டோர்கீப்பர் 1, இன்ஜின் டிரைவர் 1, லாஸ்கர் 1, டிரான்ஸ்போர்ட் டிரைவர் 1, எம்.டி.எஸ்., 2 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
வயது: 18-30 (3.11.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு
பணியிடம்: மும்பை
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Headquarters, Coast Guard Region (West), Alexander Graham Bell Road, PO Malabar Hill, Mumbai – 400 006
கடைசிநாள்: 3.11.2026
விவரங்களுக்கு: indiancoas tguard.gov.in
ஐ.ஐ.எஸ்சி – விஞ்ஞானியாக விருப்பமா
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பிரிவில் 30 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
கூடுதல் தகுதி: ராணுவத்தில் ‘அக்னிவீர்’ பிரிவில் பணியாற்றி இருக்க வேண்டும்.
வயது: 18-30 (16.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 16.10.2026
விவரங்களுக்கு: www.iisc.ac.in






Comments are closed, but trackbacks and pingbacks are open.