வேறு என்ன மறைமுகத் தேவை ?

ஏன் வேண்டாம் மேகேதாட்டு அணை? – 5

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மேகேதாட்டு அணையின் நீர், பாசனத் தேவைக்கு பயன்படுத்தப்படாது – அது பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்.

பெங்களூரு ஒரு காஸ்மோபாலிடன் நகரமாக மாறிவிட்ட நிலையில், அதன் கவர்ச்சியே இங்கு முன்வைக்கப்படுகிறது. வேளாண்மையும் அதன் வருவாயும் மங்கி வரும் சூழலில் முன்புபோல வேளாண்மைக்கு நீர் என்றால் பெரிய வரவேற்பு இருக்காது. அதனால்தான் மின்சாரம், பெங்களூருக்கு குடிநீர் போன்ற வசீகர வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. தவிர, அணைநீரை சட்டத்துக்குப் புறம்பாக எப்படி நீரேற்றுப் பாசனம் செய்வது என்பது கர்நாடகத்துக்கு கைவந்த கலையாகும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மத்திய அமெரிக்கவிலுள்ள ஒரு குட்டி நாடு ஹோண்டுராஸ். இதன் தலைநகரத்துக்கு கூடுதலாக 40% நீர் தேவைப்பட்டது. அதற்காக அணைக் கட்டாமல் சற்று மாற்றி யோசித்தது. அந்த யோசனை  மழைமுகில்களை உற்பத்தி செய்வதாகும். அதற்காக செயற்கைமழைத் திட்டத்தை நாடவில்லை. மாறாக மழைப்பொழிவுக்குக் காடுகள்தான் உதவும் என்று தீர்மானித்து அதைக் காக்கும் நோக்கத்துடன் லா டைகரா தேசிய பூங்காவுக்குப் பாதுகாப்பு நிலையை உறுதி செய்தது. அதற்கு 5% மட்டுமே கூடுதலாகச் செலவழித்தது.

மேகேதாட்டு அணைஇங்கு மட்டுமல்ல ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்ட நாடுகளில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள 108 நகரங்களில் கடந்த 2003 ஆம் ஆண்டில் காடுகள் பாதுகாப்புத் தொடர்பாக உலகவங்கி ஒரு ஆய்வை நடத்தியது. இதில் 33 நகரங்கள் காடுகளைச் சட்டரீதியாகப் பாதுகாத்ததன் மூலம் குடிநீர் வழங்கலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது தெரிய வந்தது. மேகேதாட்டு பகுதி ஏற்கனவே ஒரு காட்டுப் பகுதிதான். அதை மேம்படுத்தாமல் அழிப்பதற்காக ஒரு திட்டம் வருகிறது.

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். சரி, பெங்களூரு நகரின் நீர்த் தேவை எவ்வளவு? அதன் எதிர்கால தேவையாக 4.75 டிஎம்சி தேவைப்படுகிறது என்கிறது அரசு. பின்னர் எதற்காக 67 டிஎம்சி கொள்ளளவில் அணை? வேறு என்ன மறைமுகத் தேவை இருக்கிறது? வேறு ஏதேனும் தொழிற்துறையின் தாகமா?

பெங்களூருவில் போதுமான மழை பெய்வதால் மேகேதாட்டு திட்டம் தேவையில்லை என்கிறார் இந்தியன் இன்ஸ்டிடியூட் சயின்சின் (IISc) சூழலியல் அறிவியல் மையத்தை சேர்ந்த பேரா. டி.வி. இராமச்சந்திரா. அத்துடன் ஏற்கனவே கிடைத்து வரும் காவிரி நீரையும் கழிவு நீர் மேலாண்மையால் கிடைத்து வரும் நீரையும் முறையாக பயன்படுத்தினாலே போதும் என்கிறார் அவர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இத்துடன் பெங்களூரு நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது TGHalli அணை. 1939இல் கட்டப்பட்ட இது அண்மையில் 230 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக இயங்குகிறது. அணைக்கான வரத்துநீரான மழைநீருடன் அர்காவதி ஆற்றிலிருந்தும் பெறப்படுகிறது. இந்த அர்காவதி ஆறு காவிரியுடன் இணையும் இடத்தில்தான் மேகேதாட்டுஅணை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் நக்கீரன்
எழுத்தாளர் நக்கீரன்

டி.ஜி.ஹள்ளி அணை குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். இந்த அணையிலிருந்து பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் 4 டிஎம்சி நீருக்குப் பிறகும் அணையில் தேங்கியிருக்கும் 2.2 டிஎம்சி நீர் பயன்படுத்தப்படாமல் ஆவியாகிக் கொண்டிருக்கிறது மொத்தமுள்ள 2700 ஏக்கரில் 2300 ஏக்கர் அளவுக்கு நீர்ப் பரவியிருக்கும் இந்த 74 அடி உயர அணையிலிருந்து ஏற்கனவே இயங்கும் நிலையில் குழாய் இணைப்புகள் உள்ளன. மேகேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையில் பெங்களூரு நகர இணைப்புக் குழாய்கள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், டிஜிஹள்ளி அணைக்கும் பெங்களூரு நகரத்துக்கும் ஏற்கனவே உள்ள பயன்படுத்தப்படாத இணைப்புக் குழாய்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சொல்லப்போனால் IIScயின் அறிவுரைப்படி அணையின் நீர்த் தரம் மேம்படுத்தப்பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் பெங்களூரு நகருக்கு குடிநீர் விநியோகம் நடந்துள்ளது. ஆனால், பின்னர் அரசின் உத்தரவுப்படி ஏனோ அது நிறுத்தப்பட்டது. இப்போதும் 58 அடி உயரத்தில் தேவைகள் ஏதுமின்றி தேங்கியுள்ள ஏறத்தாழ இரண்டு டிஎம்சி நீரும் ஆவியாகிக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை மேகேதாட்டு அணைக்காக அவை வலிய ஆவியாகிக் கொண்டிருக்கலாம்.

எழுத்தாளர் நக்கீரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.