இது தோல்விக்கான நினைவுச்சின்னம் அல்ல !
மார்பகப் புற்றுநோய் கதைகள் பெரும்பாலும் உயிர்வாழ்தலைக் குறித்தே பேசுகின்றன. ஆனால், குணப்படுத்த முடியாத புற்றுநோயுடன் வாழ்ந்துவரும் பெண்களின் நிலை என்ன?
அந்தப் பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக நார்வே ஒரு பொது நினைவுச்சிலையை உருவாக்கியுள்ளது. ஒஸ்லோவின் மையப்பகுதியில் அமைந்துள்ள “செசிலி” (Cecilie) என்ற இந்தச் சிலை, 42 வடியில் Metastatic எனப்படும் முற்றிய நிலை மார்பகப் புற்றுநோயால் கண்டறியப்பட்ட, மூன்று குழந்தைகளின் தாயான செசிலி பிளாட்வால் (Cecilie Flatval) என்பவரைக் குறிக்கிறது. சிற்பி ஹாகோன் ஆண்டன் ஃபேகராஸ் (Håkon Anton Fagerås), இவரை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்டாமல், ஒரு மார்பகமும் வடுவும் கொண்ட அவரது இயற்கையான தோற்றத்திலேயே வேண்டுமென்றே செதுக்கியுள்ளார்.

இந்தச் சிலை 2022-ல் திறக்கப்பட்டு, தற்போது ஒஸ்லோவின் மிக முக்கிய பொது இடமான ஸ்பிகர்சுப்பாவில் (Spikersuppa) நிரந்தரமாக நிற்கிறது. செசிலி ஏப்ரல் 2023-ல் காலமானார், ஆனாலும் தன் சிலை தனது மரபுரிமையாக மாறுவதை அவர் காணும் வரை வாழ்ந்திருந்தார்.
இது தோல்விக்கான நினைவுச்சின்னம் அல்ல. குணப்படுத்த முடியாத புற்றுநோயுடன் வாழுமப் பெண்களும் காணப்படவும், கேட்கப்படவும், நினைவுகூரப்படவும் தகுதியானவர்கள் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
— பிரசன்ன பாலா






Comments are closed, but trackbacks and pingbacks are open.