மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாமே ?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, மணல் குவாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள சுமார் 55,000-க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், இலட்சக்கணக்கான ஓட்டுநர்கள் வேலை வாய்ப்பிழந்து லாரிகளுக்கு நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனிற்கு மாத தவணைக் கூட கட்டமுடியாமல் பரிதவித்து வருவதாகவும்; இக்கட்டான இந்நிலையை பயன்படுத்தி ஆதிக்க சக்திகள் ஆங்காங்கே ஆறுகளில் இருந்து அனுமதியின்றி மணலை திருடி விற்பனைசெய்து அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாகவும்; எம்.சாண்ட் உற்பத்திக்காக விதிமீறலும் சுற்றுச்சூழல் சீர்கேடும் நடைபெறுவதாகவும்; பொதுமக்களும் வேறு வழியின்றி தரமற்ற எம்.சாண்ட் மணலை பயன்படுத்தி வருவதாகவும்; இப்பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டுமென்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தீராத தலைவலி பிடித்த விவகாரமாக நீடிக்கும் இந்த விவகாரத்தில் மாற்றுத்தீர்வாக சில விசயங்களை சுட்டிக்காட்டுகிறார், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்ல ராசாமணி.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

செல்ல ராசாமணி
செல்ல ராசாமணி

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“தமிழகம் முழவதும் சுமார் 30-க்கும் மேற்பட்ட நீர்த்தேக்க அணைகள் (DAM) குறிப்பாக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை (METTUR DAM) மற்றும் சில அணைகள் கட்டப்பட்ட காலம் முதல் இதுவரை தூர்வாரப்படாததால் அதிக அளவில் மணல் தேங்கியுள்ளது. இதனால் அணையின் நீர்க்கொள்ளளவு குறைந்துள்ளது. மேற்படி அணைகளை தூர்வாரினாலே பல இலட்சக்கணக்காண யூனிட் மணல் கிடைக்கும்.” என்கிறார்.

மேலும், ”அரசு மணல்குவாரிகளில் முறைகேடுகளை தவிர்க்கின்ற வகையில் ஆற்றிலிருந்து அரசு மணல் விற்பனை கிடங்கிற்கு (Government Sand Sales Depo) ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணலை அள்ளி லாரியில் லோடு செய்து எடுத்துவரும் ஒப்பந்தம் (Loading & Transporting Contract) தனியாருக்கு கொடுக்காமல் பொதுப்பணித்துறையே நேரடியாக செயல்படுத்திட வேண்டும். மேலும், இணையதளப்பதிவு (Online Booking) மூலம் அரசு அறிவிக்கும் விலைக்கே கூடுதல் பணம் வசூலிக்காமல் லாரிகளுக்கு மணல் வழங்கிட வேண்டும்.” என்கிறார்.

விதிமீறல்களுக்கும் இடம்தரக்கூடாது; அதேசமயம் கட்டுமானங்களுக்கு ஆற்றுமணலும் வேண்டும் என்ற நோக்கில், அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தலாமே?

—   அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.