தந்தை பெரியார் அரசு கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மாணவர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் பொறுப்பாளரும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியருமான முனைவர் இரா. குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார், கல்லூரி முதல்வர் முனைவர் கா. அங்கம்மாள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி  தலைமை உரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். மாணிக்கவாசகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரெட் கிராஸ் எந்த காரணத்திற்காக தொடங்கப்பட்டது என்பதை கூறி ஹென்றி டொனன்ட் அவர்கள் போர்க்களத்தில் காயம் அடைந்த வீரர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லையே என்று ஏங்கி அதன் பிறகு அவர் அதற்கான கருத்துருவை உருவாக்கினார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாணவர்களுக்கான புத்தகப் பயிற்சிஜெனிவா மாநாட்டில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டு இன்று உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து நாடுகளிலும் ரெட் கிராஸ் என்றும் இஸ்லாமிய நாடுகளில் ரெட் கிரஸன்ட் என்றும் இந்த அமைப்பு உள்ளது. இந்தியாவில் 1920 இல் ரெட் கிராஸ் அமைப்பு தொடங்கப்பட்டு இன்று வரை அது சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது.

போர் காலத்திலும் இயற்கை பேரிடர் காலங்களிலும் மற்றும் கொரோனா போன்ற பெரு வியாதிகள் வந்த நேரத்திலும் இதன் சேவை அளப்பரியது,  நோய்கள்  மனித குலத்திற்கு வராமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்வதில் ரெட் கிராஸ் அமைப்பு முன்னிலையில் உள்ளது.

இதில்  தங்களை இணைத்துக் கொண்ட தன்னார்வலர்கள் ரத்த தானம் மற்றும் உடலுறுப்பு தானம், உடல் தானம்  வழங்கி மனித குலத்திற்கு  சேவை செய்ய வேண்டும் என்று கருத்துரை வழங்கினார். முன்னதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நிறைவாக மாணவத் துணைத் தலைவர் கொளசல்யா நன்றியுரையோடு விழா நிறைவு பெற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.