புற்றுநோயை வென்றவர்கள் கொண்டாடிய பிங்க் அக்டோபர் !
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (எம்.ஜி.எம்.ஜி.எச்) மற்றும் கே.ஏ.பி. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் துறை சார்பில் “பிங்க் அக்டோபர்” மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நலஉதவி நிகழ்ச்சி!
திருச்சி, அக்டோபர் 8, 2026 — திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (எம்.ஜி.எம்.ஜி.எச்) மற்றும் கே.ஏ.பி. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் துறை இணைந்து நடத்திய “பிங்க் அக்டோபர்” (Pink October) மார்பக புற்றுநோய் வென்றோர்கள் சந்திப்பு மற்றும் செயற்கை மார்பகப் prosthesis (Knockers) வழங்கும் விழா இன்று (08.10.2026) காலை 10.30 மணியளவில், எம்.ஜி.எம்.ஜி.எச் நான்காவது தளத்தில் உள்ள தன்வந்திரி அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மருத்துவத்துறையின் சாதனைகள், சமூக விழிப்புணர்வு மற்றும் முழுமையான நோயாளி பராமரிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த விழாவில், சுமார் 50 மார்பக புற்றுநோயை வென்ற பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களின் ஊக்கமளிக்கும் உரைகள்
விழா மிகச் சிறப்பான முறையில் தொடக்கவுரையுடன் ஆரம்பமானது. கே.ஏ.பி. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.எம்.ஜி.எச் மருத்துவமனையின் முதல்வர் (Dean) பேராசிரியர் டாக்டர் S. குமரவேல் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரை ஆற்றினார். அவர் தனது உரையில், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான உளவியல் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும், பின்வரும் மருத்துவத்துறை தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்:
* பேராசிரியர் டாக்டர் A. அர்ஷியா பேகம் (துணை முதல்வர்)
* பேராசிரியர் டாக்டர் N. பிரசன்னா (மருத்துவ கண்காணிப்பாளர்)
* பேராசிரியர் டாக்டர் E. அருண்ராஜ் (துணை மருத்துவ கண்காணிப்பாளர்)
அரசு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் (Surgical Oncology) மற்றும் பொது அறுவை சிகிச்சைத் துறைகளின் தலைவர்களும் விழாவில் கலந்துகொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட நவீன சிகிச்சைகள் குறித்து விளக்கி ஊக்கமளிக்கும் உரையாற்றினர்.
புற்றுநோய் வென்றோரின் நெகிழ்ச்சியான அனுபவங்கள்
நிகழ்ச்சியின் மிகச் சிறப்பான மற்றும் உணர்ச்சிகரமான பகுதியாக, புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடிய பெண்களும் அவர்களின் கணவர்களும் மேடையில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். எம்.ஜி.எம்.ஜி.எச் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு அளித்த அரவணைப்பான சிகிச்சைக்கு அவர்கள் கண்ணீ மல்க நன்றி தெரிவித்தனர். சரியான நேரத்தில் கிடைத்த மருத்துவ உதவியும், குடும்பத்தினரின் உறுதுணையும் தங்களுக்கு எப்படி மறுவாழ்வு அளித்தது என்பதை அவர்கள் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
சாய்ஷா ஃபவுண்டேஷன் சார்பில் செயற்கை மார்பகப் prosthesis (Knockers) வழங்கல்
புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின் (Mastectomy) பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களைக் குறைக்கும் வகையில், இந்நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சுமார் 50 நோயாளிகளுக்கு, அவர்களின் அழகு மற்றும் உடல் சமநிலை உணர்வுக்காக (Cosmetic benefit) “சாய்ஷா ஃபவுண்டேஷன்” (Saaisha foundation) நிறுவனம் சார்பில் ஸ்பான்சர் செய்யப்பட்ட, மென்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் crocheted செய்யப்பட்ட மார்பகப் prosthesis (Knockers) ஒரு ஜோடி வீதம் வழங்கப்பட்டது. இந்த உதவிப் பொருள் பயனடைந்த பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அளித்தது.
மருத்துவ நிபுணர்கள், புற்றுநோயை வென்றவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே தொடர்ந்து பரப்புவதாகவும், சமூகத் தடையுடைத்து வாழ்வியலை மீட்டெடுப்பதாகவும் கூட்டு உறுதிமொழி ஏற்ப்புடன் “பிங்க் அக்டோபர்” விழா இனிதே நிறைவுபெற்றது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.