பண்டிதமணி செம்மல் வ.சுப.மாணிக்கம் ஆய்வரங்கத் தொடக்க விழா

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கம் ஆய்வரங்கத் தொடக்கவிழா மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் திருஞானமூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள மேலைச்சிவபுரியில் அமைந்துள்ள கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் 12.10.2026 ஆம் நாள் பண்டிதமணி செம்மல், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின பெயரில் ஆய்வரங்கத் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பேரா முனைவர் வே.அ. பழனியப்பன் தலைமை தாங்கினார். ஆய்வரங்க நெறியாளர் பேரா முனைவர் சி முடியரசன் வரவேற்புரை கூறினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடக்க விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் திருஞானமூர்த்தி கலந்துகொண்டு தமிழ் இலக்கிய ஆய்வுப் போக்குகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் பெரி.அழகம்மை முனைவர் சித.குறிஞ்சி முனைவர் மா.தமிழ்ச்செல்வி முனைவர் வீர.மகேசுவரி கல்லூரி நூலகர் மற்றும் பெருந்திரளான அளவில் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவின் நிறைவில் ஆய்வரங்க நெறியாளர் பேரா முனைவர் சி முடியரசன் நன்றி கூறினார்.

—   ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.