பள்ளி மாணவி மயங்கி விழுந்து மர*ணம்!

சமயபுரம் அருகே உள்ள வெங்கன்குடியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஹேமா அவர்களின் மகள் தன்யா ஸ்ரீ லால்குடி அருகே உள்ள கீழ அன்பில் பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி இருந்து அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்றைய தினம் காலை பள்ளிக்கு வந்த மாணவி காலை உணவு சாப்பிட்டு விட்டு உடற்கல்வி வகுப்பில் சக மாணவிகளுடன் கோகோ விளையாடிக் கொண்டிருந்தார்.

விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். அப்பொழுது அருகே உள்ள ஆசிரியர்கள் இந்த மாணவியை மீட்டு கீழ அன்பில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்த்த பொழுது அந்த மாணவி ஏற்கனவே இறந்து விட்டார் என்பது தெரிய வந்தது.

இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணத்தை விசாரணை செய்து  வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.