திருச்சி மக்களின் ஷாப்பிங் ரகசியம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் புத்தாடைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரம்பரியமாகப் பல ஆண்டுகளாக சாரதாஸ் நிறுவனத்தில் ஆடைகள் வாங்குவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே இடத்தில் ஆடைகள் கிடைப்பதும், பல்வேறு ரகங்களில் ஆடைகள் இருப்பதும் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
அதேசமயம், திருச்சியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகாராஜா உள்ளிட்ட கடைகளிலும் ஆடைகளின் விலை, தரம் மற்றும் புதிய கலெக்ஷன்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கத் திட்டமிட்டுள்ளதாகப் பலர் தெரிவித்தனர். மேலும், போனஸ் மற்றும் சம்பளம் கிடைத்த பிறகு தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஆடைகள் வாங்குவதாகவும் சிலர் கூறினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.