நாகர்கோவில் புலவர்விளை  N.V.மக்களின் வேதனை !

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 29 வது வார்டு புலவர்விளை,  பகுதி  N.V.தெருவில் சுமார் 150 குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டில் பிலிப்ஸ்புரம் சர்ச், புனித ஜோசப் கான்வென்ட் பள்ளி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, ஆரியபவன் ஹோட்டல்,  சி.பி.ராமசாமி ஐயர் நினைவு பூங்கா, பொதுப்பணி- நீர்வளத்துறை அலுவலகங்கள், ஆயுர்வேத மருத்துவமனை, கணேசபுரம் ரோடு போன்ற மாநகரின் முக்கிய போக்குவரத்து இணைப்பு  சாலைகள் உள்ளன.

29 வது வார்டு கவுன்சிலர் மீனாதேவ் பாஜகவை சேர்ந்த முன்னாள் நாகர்கோவில் நகரமன்ற தலைவர் என்பதாலேயே, புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக, N.V. தெருவில் ஆட்டோ கூட எளிதில் தெருவுக்குள் வரமுடியாத வகையில் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டிருப்பதாகவும்; இதனால் நோயாளிகளை கட்டிலுடன் சேர்த்து தூக்கிக்கொண்டு ரோட்டிற்கு வரும் அவலத்தை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையோடு பகிர்கிறார்கள். நடவடிக்கை எடுக்குமா, நாகர்கோவில் மாநகராட்சி?

—  ராஜூ

Comments are closed, but trackbacks and pingbacks are open.