ஒரு மணி நேரத்திற்கு ரூ.150? உருவாக்கப்படுமா தனிச் சட்டம்?
வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்குத் தனிச் சட்டம் இயற்றுதல், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர்கள் இயக்கத்தினர் மத்திய அரசுக்குப் போஸ்ட் கார்டுகள் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ப. கிளாரம்மாள், இந்தியா முழுவதும் 22 மாநிலங்களிலும், தமிழகத்தில் 14 முதல் 15 மாவட்டங்களிலும் தங்கள் அமைப்பு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் C189 உடன்படிக்கைக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்து, மத்திய சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ஒரு மணி நேரத்திற்கு ₹150 குறைந்தபட்ச ஊதியம், மாதம் ₹3,000 ஓய்வூதியம், குழந்தைகளுக்குக் கல்வி உதவி மற்றும் மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
மதுரை மாவட்டத் தலைவர் பானுமதி பேசுகையில், நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உதவிகள் வழங்க வேண்டும் என்றும், வீட்டு வரி வசூலில் ஒரு சதவீதத்தைத் தொழிலாளர்களின் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
வீட்டுவேலைத் தொழிலாளர்கள்! ஒரு மணி நேரத்திற்கு ரூ.150? உருவாக்கப்படுமா தனிச் சட்டம்?
– மகா
Comments are closed, but trackbacks and pingbacks are open.